விமானத்திற்குள் எலி நடமாட்டம் இருந்ததால், ஏர் இந்தியா பயணிகள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம், ஜம்மு -காஷ்மீர் இடையே உள்நாட்டு சேவையை வழங்கி வருகிறது. (ஏப்ரல் 21) ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து மதியம் 2.15 மணிக்கு ஜம்மு நோக்கி புறப்பட தயாரானது.
விமானத்தில் எலி (Rat on the Plane)
விமானம் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், விமானத்திற்குள் எலி இருந்துள்ளது கண்டறியப்பட்டது. உடனடியாக எலியை தேடி பிடித்து அப்புறப்படுத்தப்பட்ட பின் விமானம் புறப்பட்டது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.10 மணிக்கு விமானம் புறப்பட்டது.
விமானத்திற்குள் எலி எப்படி புகுந்தது என்பது குறித்து விசாரணை நடத்த டி.ஜி.சி.ஏ. எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானத்தில் இருந்த எலியால் பயணிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இரயில் நிலையங்களில் அதிக அளவிலான எலிகளை நம்மால் காண முடியும். ஆனால், விமானத்தில் எலியின் அட்டகாசத்தை அங்கிருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் கண்டுள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments