இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளரும் உலகம் அறிந்த இசையமைப்பாளருமான ஏ ஆர் ரஹ்மான் திங்களன்று செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட தனது இசை நிகழ்ச்சி "தவறாக நிர்வகிக்கப்பட்டதால்" பாதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார், மேலும் டிக்கெட் விலை திருப்பித் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை கான்சர்ட் நிகழ்ந்தது. நிகழ்ச்சி தவறாக நிர்வகித்ததாகவும், இதனால் பலர் சிரமத்தை மேற்கொண்டதாக வெளியான அதிருப்தி கருத்துகளுக்கு பதிலளித்த அவர், தனது சமூக ஊடக தளமான X இல் தனது அறிக்கையை வெளியிட்டார்.
ஆஸ்கார் விருது பெற்ற ரஹ்மான், செப்டம்பர் 10-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தாம்பரம் நகர காவல் ஆணையர் அமல்ராஜின் அதிகார வரம்பில் உள்ள தனியார் அரங்கில், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். எதிர்பார்த்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 15,000 பேர் அங்கு குவிந்தனர். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.
எனவே இது குறித்து, நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
ECR இல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சரியான நேரத்தில் இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று மக்கள் பல சமூக ஊடக இடுகைகளை வெளியிட்டனர்.
சமூக ஊடகப் பதிவுகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, நிகழ்வு ஏற்பாட்டளர்கள், விஷயங்களைக் கையாண்ட விதத்தை விமர்சித்து, போக்குவரத்து நெரிசல்கள், டிக்கெட் வாங்கியும் அனுமதி மறுக்கப்பட்ட மக்கள் மற்றும் கூட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து பதிவிட்டுள்ளனர்.
ஆன்லைனில் புகார்கள் குவிந்து வருவதால், ரஹ்மான் இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“அன்புள்ள சென்னை மக்களே (உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைவு அனுமதி பெறாதவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை arr4chennai@btos.in இல் உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் குழு விரைவில் பரிசீலித்து பணம் திரும்பக் கூடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் என," அவர் X இல் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியை நிர்வகித்த ACTC Events, சமூக ஊடகத் தளத்தில் பதிலளித்துள்ளது. X இல் குறிப்பிட்ட செய்தி, நெரிசல் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனவர்களுக்கு தனது மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். Actc நிகழ்வு நிறுவனர் ஹேமந்த் தனது நிறுவனம் முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்று கூறியுள்ளார். மேலும், நிகழ்ச்சியை சிறப்பாக அரங்கேற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹமான்-இன் தவறு ஏதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க:
புதிதாக மின் மோட்டர் பம்ப்செட் வாங்க யாரை அணுக வேண்டும்?
2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!
Share your comments