ஹோலிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட ஏதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாயை அட்வான்ஸாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கில் இந்தத் தொகையைச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. இந்த ஹோலி பண்டிகையில், ஊழியர்கள் தாராளமாக செலவழிக்கலாம். ஏனெனில், சிறப்பு பண்டிகை முன்பணத் திட்டத்தின் கீழ் (special festival advance) அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும்.
ரூ.10,000
மத்திய அரசின் அட்வான்ஸ் சலுகைத் திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வழங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது. இதன் மூலம் ஹோலி பண்டிகையின் போது ரூ.10,000 முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இது வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். கடந்த ஆண்டும் இதே சலுகையை மத்திய அரசு ஊழியர்கள் அனுபவித்தது நினைவில் இருக்கலாம்.
வட்டி கிடையாது
பண்டிகை சமயத்தில் வழங்கப்படும் இந்த முன்பணம் முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த ரூ.10,000 முன்பணத்துக்கு வட்டி வசூலிக்கப்படாது. அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் இந்த 10,000 ரூபாயை ஊழியர்கள் 10 தவணைகளில் ரூ.1000 என்ற அளவில் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு ரூபாய் கூட வட்டி கிடையாது.இந்த சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படலாம்.
மத்திய அரசு மட்டுமில்லாமல் மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்த ஹோலி பண்டிகைக்கு அவ்வாறு செயல்படுத்தப்பட்டால் சுமார் ரூ.10,000 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இந்த அட்வான்ஸ் தொகையை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலவிட முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடல்-மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Share your comments