10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றத் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தத் தகவல் உண்மைதானா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உங்கள் வங்கிக்கணக்கில் உடனடியாக வெறும் 10,100 ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பலரும் 10 ஆயிரம் ரூபாயை சேகரித்து, வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் ஒரு சிலர், 10 ஆயிரம் ரூபாய்க்கு, ரூ.30 லட்சம் கிடைக்குமா என பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இது பொய்யான தகவல் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிந்து தகவல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வங்கிக் கணக்கில் 10,100 ரூபாய் செலுத்தினால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என பரவி வரும் தகவல் பொய்யானது என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து PIBவெளியிட்டுள்ள செய்தியில், 10,100 ரூபாய் செலுத்தினால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என இந்திய அரசின் பேரில் பரவி வரும் கடிதம் போலியானது. மக்களிடம் பணம் பறிக்க அரசு அமைப்புகளின் பெயரை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இதுபோன்ற மோசடி கும்பல்கள் பரப்பு செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments