சேமிப்பு என்பது நல்ல விஷயம் தான். ஆனால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். எந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயமே.
ஏனெனில் நெருக்கடியான காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால், எதில் அதிக லாபம் ஈட்டலாம். இப்படி பல விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் மாதத்திற்கு ரூ .5,000 முதலீடு செய்ய தயாராக இருந்தால், அதுவும் அவர் 20 ஆண்டுகள் முதலீடு செய்ய விரும்புகிறார் என்றால் . அவர் எந்த திட்டத்திலும் முதலீடு செய்யலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எவ்வளவு லாபம் ஈட்டுவார்? மற்ற விவரங்கள் என்னவென்று பார்ப்போம்.
நெருக்கடியான நிலையில் மக்கள்
இன்றய காலகட்டத்தில் நம்மில் பலர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்திருப்போம். ஏனெனில் தற்போதைய நெருக்கடியில் அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போதுள்ள சேமிப்புகளை வைத்து காலத்தினை ஓட்டி வருகின்றனர். சேமிப்பு இல்லாதவர்கள் இன்னும் நெருக்கடியான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வளவு லாபம்?
இந்த வகையில் நிபுணர்களின் முதல் பரிந்துரை மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund ) திட்டங்களில் முதலீடு செய்யவது தான் . இதன் மூலம் 12% வரை லாபத்திற்கு வழிவகுக்கும். எனவே நிபுணர்களும் இதை தான் பரிந்துரைக்கின்றனர். இந்த லாபத்தைப் பார்க்கும்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 50 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த ஆண்டில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தொகை வெறும் ரூ .12 லட்சம். உங்கள் இலக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் ரிஸ்க்கும் எடுக்க வேண்டியிருக்கும்.
முதலீட்டு காலத்தினை அதிகப்படுத்தினால்?
20 வருடங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு செய்தால், நீங்கள் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை பெறுவீர்கள். மேலே உள்ள 5,000 ரூபாயை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அதாவது 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும்போது, உங்கள் கையில் 95 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
எப்போது தொடங்கலாம் ..
எனவே உங்கள் இலக்கைப் பொறுத்து நீங்கள் ஆரம்ப கட்டத்திலிருந்தே முதலீடு செய்யத் தொடங்கினால், உங்கள் ஓய்வு நேரத்தில் நல்ல வருமானத்தைப் பெறலாம். உதாரணமாக, ஒருவர் 23 வயதில் இந்த சேமிப்பைத் தொடங்குகிறார் என்று கருதினால், அவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் தாராளமாக தொடரலாம். அப்படி அவர் 23 வயதில் தொடங்கினால், அவர் தனது 48 வயதில் கணிசமான தொகையை கையில் பெறுவார். எனவே நீங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றலாம் மேலும் முதலீடு செய்யலாம். அல்லது, முடிந்தால், தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
அரசு திட்டத்தில் முதலீடு
எனக்கு மியூச்சுவல் பண்டில் நம்பிக்கையில்லை, அரசு முதலீட்டு திட்டங்களில் இதே தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனில் அதற்கும் சிறந்த ஆப்சன்கள் இருக்கிறது. அதில் முதல் ஆப்சன் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் முதல் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். வட்டியும் முதலும் சேர்த்து உங்கள் கையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு 41,23,206 ரூபாய் கிடைக்கும்.
20 வருடங்கள் கழித்து எவ்வளவு?
இதுவே 20 ஆண்டுகளுக்கு அதே 5000 ரூபாயினை மாதம் முதலீடு செய்கிறீர்கள் என்றாலும், உங்கள் கையில் 26,63,315 ரூபாய் இருக்கும். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். ஆக இது அரசின் திட்டம், கணிசமான வருவாய், பாதுகாப்பு, சந்தை அபாயங்கள் இல்லை. எனினும் காலாண்டுக்கு ஒரு முறை நிலவரத்திற்கு ஏற்ப அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது.
அரசின் கிசான் விகாஸ் திட்டம்
அரசின் கிசான் விகாஸ் திட்டத்தின் படி, உங்கள் முதலீடு 10 ஆண்டு 4 மாதங்களில் இரட்டிப்பாகும். அரசாங்கத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணையத்தில் 18 வயதை பூர்த்தி செய்த எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணையத் தகுதியானவர். இதற்கு குறைந்தபட்சம் ஆயிரம் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி திட்டம்
இது போன்ற ஏராளமான அரசு திட்டங்கள் உள்ளன. அவற்றில் உங்களின் இலக்கிற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெறலாம். இதே உங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எனில், சுகன்யா சம்ரிதி திட்டத்தில் தொடங்கலாம். இதிலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு, வருடத்திற்கு 60000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்தால், நீங்கள் மொத்தம் 9,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். 21 வருடம் கழித்து 25,46,062 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க....
PM-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!
PM-Kisan Scheme: 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,000 பணம்!
PM Kisan நிதி அடுத்த வாரம் விடுவிப்பு? மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்தால் ரூ.4000 கிடைக்கும்!!
Share your comments