சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள், சுய தொழில் செய்வோர் என பலரும் தங்களது பணி ஓய்வுகால வருமானத்துக்கு இப்போதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும். பணி ஓய்வுக்காலத்துக்கு இப்போதே திட்டமிடுவதால் எதிர்காலத்தில் சுமை இல்லாமல் பலன்களை அனுபவிக்கலாம்.
தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)
தேசிய பென்சன் திட்டத்தை (NPS) பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் ஊழியர்களும் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வுக்காலத்தில் பலன் பெறுவது எப்படி என பார்க்கலாம். தேசிய பென்சன் திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் தொகை பங்குச் சந்தையிலும், அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோர் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமான வரியை சேமிக்க முடியும். தேசிய பென்சன் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதால் பணி ஓய்வுபெறும்போது கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் நிதியை பெற முடியும்.
உதாரணமாக, 40 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் தோறும் 5000 ரூபாய் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீட் செய்து வந்தால், இறுதியில் 1.90 கோடி ரூபாய்க்கு மேல் நிதி கிடைக்கும். இந்த மெச்சூரிட்டி தொகையை எடுத்து SWP (Systematic Withdrawal Plan) திட்டங்களில் முதலீடு செய்தால் மாதம் தோறும் கிட்டத்தட்ட 64000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.
40 ஆண்டுகள் அல்லாமல் 20 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்துவந்தால் இறுதியில் 1.27 கோடி ரூபாய் நிதி கிடைக்கும். இதையும் SWP திட்டத்தில் முதலீடு செய்து மாதம் தோறும் பென்சன் பெறலாம்.
மேலும் படிக்க
அதிக வட்டி தரும் அரசு வங்கிகள்: இலாப மழை பொழியும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்!
EPFO, மத்திய அரசு பென்சனர்கள் வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!
Share your comments