1. மற்றவை

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!

R. Balakrishnan
R. Balakrishnan
Scholarship

கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்றோர்கள், ஆயுதப்படை மற்றும் மத்திய துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களது கல்விக்கு உதவும் வகையில் ஏ.ஐ.சி.டி.இ., இந்த உதவித்தொகை (Scholarship) திட்டத்தை செயல்படுத்துகிறது.

தகுதிகள்:

  • ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • முழுநேர கல்வியாக பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டுக்குள் தற்போது படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
  • அனைத்து ஆதரங்கள் வாயிலாகவும் ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை விபரம்:

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம், புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்கள் வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை எண்ணிக்கை:

டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் தலா ஆயிரம் மாணவர்கள் வீதம் மொத்தம் 2 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

மேலும் படிக்க

ஒரு திருக்குறள் சொன்னால் 1 டாலர் பரிசு: புதுகை இன்ஜினியர் அசத்தல்!

9ம் வகுப்பு மாணவனின் அசாத்திய திறமை: ராயல் என்ஃபீல்ட் பாகங்களைக் கொண்டு இ-பைக் தயாரிப்பு!

English Summary: Scholarships for orphans! Published on: 30 November 2021, 06:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.