மஹாராஷ்டிராவில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள், அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருடப்பட்ட நகைகள் (Stolen Jewelry)
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதன் நிறுவனரான அர்ஜன் தஸ்வானி வீட்டில் 1998ல் திருடர்கள் சிலர் நுழைந்தனர். தஸ்வானி மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை திருடிச் சென்றனர். அதே ஆண்டு இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன.
ஒப்படைப்பு (Hand Over)
எனினும் அந்த நகைகள் உரிமையாளரிடம் அப்போது ஒப்படைக்கப்படவில்லை. இதற்கிடையே 2007ல் அர்ஜன் தஸ்வானி காலமானார். இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அர்ஜன் தஸ்வானிக்கு பதில், அவரது மகன் ராஜு தஸ்வானி இந்த வழக்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோரே, மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை ராஜுவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கான ரசீதுகளை ஆதாரமாக காண்பித்து ராஜு அவற்றை பெற்றார். 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகளின் தற்போதையை மதிப்பு 8 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
குப்பையில் கிடந்த 9 சவரன் நெக்லஸ்: மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்!
Share your comments