தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் மாதம் முதல் ரேஷன் பொருட்களை வாங்க மக்கள், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், எனவே இதனை விரைந்து வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Smart ration card):
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மாதம் ரேஷன் அட்டைதாரர்கள் அரசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நியாய விலைகடைகளில் மலிவு விலையில் பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
மேலும், திமுக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து 2021 ம் ஆண்டில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை சமர்பித்து வருகின்றனர். வெள்ளை ரேஷன் கார்டு, பிங் ரேஷன் கார்டு என்று 5 வகை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இவை குடும்ப தலைவரின் வருமானம் பொறுத்து, இந்த கார்டு வழங்கப்படுகிறது. 2021 இறுதியில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடதக்கது. இது குறித்த தகவல் பயனாளிகளின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.
TNPSC: குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும்! விவரம் உள்ளே!
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் புதிய ரேஷன் கார்டுகள் அதாவது ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த மாதம், புதிய கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் வரும் 25ம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. எனவே புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை அவர்கள் வாங்கும் வகையில், அவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கு 1.82 லட்சம் கோடி!
Share your comments