1. மற்றவை

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு: இலவசப் பயிற்சி!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Tamilnadu Chief Secretariat Jobs: Free Training!

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள், பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய முழுவிவரம் அறிய பதிவை தொடருங்கள்.

அண்மையில் நடைபெற்ற TNPSC Group-IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களில் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் இப்பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாண்யம், தொகுதி V-A-ல் (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி) அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர்/உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அமைச்சுப் பணி/தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர்/ இளநிலை உதவியாளர்களைக் கொண்டு பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இப்பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி, தேர்வுக்கு விண்ணப்பித்து, இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு அமைச்சுப் பணி/தமிழ்நாடு நீதி அமைச்சுப்பிணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் 26/10/2011 வரை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9865808127, 9894541118, 8667276684,6381481895 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேற்படி, தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 29/10/2022 சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை நடைபெறும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்குமாம் வங்கி?

கூகுள் பே (அ) ஃபோன் பேயில் ஒரு நாளில் எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம்?

English Summary: Tamilnadu Chief Secretariat Jobs: Free Training!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.