1. மற்றவை

PFக்கும் வந்துவிட்டது வரி- புதிய விதிகள் விரைவில் அமல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பிராவிடென்ட் ஃபண்ட் எனப்படும் (Provident Fund) தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரி கட்ட வேண்டிய வகையில், விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மாத சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்களும் ஒரு பணியாளராக இருந்தால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஃப்ஓ-வில் கண்டிப்பாக கணக்கு வைத்திருப்பீர்கள்.மாத சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்களும் ஒரு பணியாளராக இருந்தால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஃப்ஓ-வில் கண்டிப்பாக கணக்கு வைத்திருப்பீர்கள்.
இனிமேல் பிஎஃப் கணக்கிற்கும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் இப்போது பி.எஃப் விதிகளில் சில புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஏப்ரல் 1, 2022 முதல், தற்போதுள்ள பிஎஃப் கணக்குகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிஎஃப் கணக்குகளுக்கு வரி விதிக்கப்படும் கடந்த ஆண்டு புதிய வருமான வரி விதிகளை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இதன் கீழ் பிஎஃப் கணக்குகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும்.

இதன்படி ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணியாளர்கள் பங்களிப்பு இருக்கும் நிலையில், பிஎஃப் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும். அதிக வருமானம் உள்ளவர்கள் அரசின் நலத்திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே, இந்தப் புதிய விதிகளின் நோக்கம்.

 முக்கிய அம்சங்கள்

  • தற்போதுள்ள பிஎஃப் கணக்குகள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத பங்களிப்பு கணக்குகளாக பிரிக்கப்படும்.

  • வரி விதிக்கப்படாத கணக்குகளில் அவற்றின் குளோசிங் கணக்குகளும் இருக்கும். ஏனெனில் இவற்றின் தேதி மார்ச் 31, 2021 ஆக இருக்கும்.

  • புதிய பிஎஃப் விதிகள் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்தப்படும்.

  • ஆண்டுக்கு ₹ 2.5 லட்சத்திற்கு மேல் ஊழியர் பங்களிப்பிலிருந்து பிஎஃப் வருமானத்திற்கு புதிய வரியை அறிமுகப்படுத்த ஐடி விதிகளின் கீழ் ஒரு புதிய பிரிவு 9D சேர்க்கப்பட்டுள்ளது.

  • தற்போதுள்ள பிஎஃப் கணக்கில் வரி விதிக்கக்கூடிய வட்டியைக் கணக்கிடுவதற்கு இரண்டு தனித்தனி கணக்குகள் உருவாக்கப்படும்.

  • இவர்களுக்கு எந்த வித்தியாசமும் இருக்காது.

  • இந்தப் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான பிஎஃப் சந்தாதாரர்கள் ரூ. 2.5 லட்சத்தின் வரம்பினால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் புதிய விதியால் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் முதற்கட்டமாக அதிக வருமானம் பெறும் ஊழியர்களை பாதிக்கும். அதாவது, உங்கள் சம்பளம் குறைவாகவோ அல்லது சராசரியாகவோ இருந்தால், இந்த புதிய விதியால் உங்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது.

மேலும் படிக்க...

வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம்- பெறுவதற்கான வழிமுறைகள்!

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

English Summary: The tax has come to PF- new rules come into effect soon

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.