1. மற்றவை

சிங்கிள் பசங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
Investment schemes for Singles

நீங்கள் சிங்கிளாக இருக்கும்பட்சத்தில் மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை சேமிப்பிற்காக ஒதுக்க முடியும் என்றால், அதே சமயம் நீங்கள் முரட்டுத்தனமான லாபத்தை எதிர்பார்க்கிறீர்களேயானால் உங்களுக்கென சில ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அது குறித்து இங்கே நீங்கள் காணலாம்.

சிங்கிள்ஸ் முதலீடு (Investment for Singles)

நீங்கள் சொத்து வகைகளில் முதலீடு செய்ய நினைத்தால் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதிலும் ஆண்டுதோறும் 18% லாபம் தருமெனில் உங்களுக்கு அது ஜாக்பாட் தானே. தற்போதைய சந்தையில், ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கலாம். அதிலும் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள் அக்கூட்டத்தை சேர்ந்த ஒரு ஃபண்ட் வகைதான்.

இந்த ஃபண்டுகள் தங்கள் சொத்துக்களில் 65-80 சதவீதத்தை ஈக்விட்டிகளிலும், 20-35 சதவீதத்தைக் கடன் கருவிகளிலும் முதலீடு செய்கின்றன. நாங்கள் இங்கு முன்னிலைப்படுத்திய ஹைப்ரிட் ஃபண்ட் அதன் தொடக்கத்திலிருந்தே நம்பிக்கைக்குரிய வருமானத்தை வழங்கி வருகிறது. அதிலும் அந்த ஃபண்டின் SIP திட்டங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தையும் கொடுத்துள்ளது. அந்த ஃபண்டைப் பற்றி இனி காணலாம்.

ஹெச்எஸ்பிசி ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட் (HSBC Equity Hybrid Fund - Direct – Growth):

இந்த ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட் 22 அக்டோபர் 2018 அன்று HSBC மியூச்சுவல் ஃபண்டால் தொடங்கப்பட்டது. இது ஒரு திறந்தநிலை ஹைப்ரிட் ஃபண்ட் திட்டமாகும். இந்த ஃபண்ட் பங்கு மற்றும் பங்கு தொடர்பான கருவிகளில் அதிக அளவிலான தொகையை முதலீடு செய்கிறது. இது ஒரு நடுத்தர சந்தை அபாயங்களை உடைய ஒரு ஃபண்டாகும். இது பியர் ஃபண்டுகளிடையே சராசரிக்கும் மேலான லாபத்தை கொடுத்துள்ளது. இந்த ஃபண்டிற்கன குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5,000 மற்றும் கூடுதல் முதலீட்டுக்கு ரூ. 1000 சேர்க்கலாம்.

அதே SIP முறையில் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 500 இல் இருந்தே தொடங்குகிறது. இதற்கு லாக்-இன் காலம் இல்லை. இருப்பினும், 365 நாட்களுக்குள் நீங்கள் உங்கள் முதலீட்டிலிருந்து 10%க்கும் அதிகமான யூனிட்களை வெளியெடுத்தால் 1% வெளியேற்றக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஃபண்ட் பங்குகளில் 70.41% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 38.74% லார்ஜ்-கேப் பங்குகளிலும், 10.44% மிட்-கேப் பங்குகளிலும், 7.65% ஸ்மால்-கேப் பங்குகளிலும் முதலீடு செய்கின்றன. மீதமுள்ள தொகையில் 23.53% முதலீட்டைக் டெட் (DEBT) பங்குகளில் கொண்டுள்ளது. அதில் 12.96% அரசுப் பத்திரங்களிலும், 10.57% மிகக் குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

அதிக வட்டி தரும் அரசு வங்கிகள்: இலாப மழை பொழியும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்!

EPFO, மத்திய அரசு பென்சனர்கள் வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!

English Summary: These are the best investment plans for singles! Published on: 14 November 2022, 09:06 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.