1. மற்றவை

TNEB: மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்!

Poonguzhali R
Poonguzhali R


தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக கட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

மின்சார அலுவலகங்களுக்கு நேரில் சென்று செலுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது. மின் கட்டண உயர்வு பாதிப்பில் இருந்து விடுபடாத நிலையில் திடீரென ஆதார் எண்ணை இணைக்க கூறுவது மின் நுகர்வோரை மேலும் சிரமத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருக்கிறது.

ஆதார் எண் ஏன் இணைக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்காமலும் கால அவகாசம் கொடுக்காமலும் திடீரென இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 'கூகுள்பே' மூலம் மட்டும் தற்போது ஆதார் இணைக்கப்படாமல் மின் கட்டணம் செலுத்த முடிகிறது. இணையதளம் வழியாக செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி கொண்டு இருக்கிறார்கள்.

கடைசி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிற நிலையில் ஆதார் இணைக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஆங்காங்கே உள்ள அனைத்து பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் பலர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் சேவை மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

பாமர மக்களுக்கு உதவிட மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற மின்சார அலுவலகங்களில் இதற்காக பிரத்தியேக கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதனை எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது.

வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால் ஆதாரில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணினைக் கட்டாயம் மின்சார அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இதுகுறித்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்கள்,'மின் இணைப்போடு ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்றும், ஆன்லைன் வழியாக மேலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

ரூ.17.63 கோடியில் புதிய திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

English Summary: TNEB: Special counters to link Aadhaar in electricity offices!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.