தமிழகத்தில் காவல் சார்பு ஆய்வாளர் (SI- தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையாத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரங்கள் பின்வருமாறு-
மொத்த காலிப்பணியிடங்கள்: 615 + 06 பின்னடைவு காலிப்பணியிடங்கள்
காவல் சார்பு ஆய்வாளர் காலிபணியிடம் (தாலுகா):
ஆண்கள்- 255 + 2 (பின்னடைவு), பெண்கள்- 109
காவல் சார்பு ஆய்வாளர் காலிபணியிடம் (ஆயுதப்படை):
ஆண்கள்- 99+3 (பின்னடைவு), பெண்கள்- 42+1(பின்னடைவு)
காவல் சார்பு ஆய்வாளர் காலிபணியிடம் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை):
ஆண்கள்- 110
வயது வரம்பு:
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப்போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதிகள்:
இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள வாயிலாக 01.06.2023 முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும்.
இத்தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும். எழுத்துத் தேர்வு நடைப்பெறும் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து 20% காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கும், மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் சார்ந்துள்ள வாரிசுத்தாரர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தலா 10% ஒதுக்கீடு வழங்கப்படும்.
இலவச பயிற்சி வகுப்பு:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 11.05.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுப்போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியின்போது பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மேலும் தொடர்ச்சியான இடைவெளிகளில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தினை 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது decgcpdktcoachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
pic courtesy: DT/ krishi jagran Edit
மேலும் காண்க:
164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments