கடந்தாண்டு (2022) மார்ச் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி, க்ரிஷி ஜாக்ரான் பங்களிப்புடன் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பர்லகேமுண்டி பகுதியில் அமைந்துள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ” உட்கல் க்ரிஷி மேளா” முதல் முறையாக நடைபெற்றது.
அந்த நிகழ்வின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தாண்டு வரும் பிப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள், மீண்டும் அதே செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ”உட்கல் க்ரிஷி மேளா- 2023” நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், அமைப்புகள் தங்களின் தயாரிப்புகள், வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் மத்தியில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை தருகிறது.
மேலும் இந்த ”உட்கல் க்ரிஷி மேளா” விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பண்ணை உரிமையாளர்கள், விவசாயப் பொருட்கள் விநியோகஸ்தர்கள், சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் வல்லுநர்கள், தொழிலதிபர்கள், ஊடக நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான இணைப்பு தளமாக விளங்கும்.
விவசாயிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைக்கவும், உயர்மட்ட வேளாண் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும் இந்த மேளா வாய்ப்பு ஏற்படுத்தித்தரும். மேலும் வேளாண் இயந்திரங்களின் தேவை, பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து அறியவும், விவசாயத்திற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் , விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வழிவகை செய்யும்.
இந்த மேளா விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தகவலை பெறவும், அவற்றின் மூலம் தனது வருமானத்தை மேம்படுத்தவும் உதவும் என்பதால் இதில் விவசாயிகள் கடந்தாண்டினை போல் பெருமளவில் இந்தாண்டும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
பாஸ்மதி அரிசி உற்பத்திக்கு முக்கியத்துவம் தாருங்கள் - பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
Share your comments