லக்னோவில் நேற்று (பிப்ரவரி 12, 2023) உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023- நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுயத்தொழில் முன்னெடுப்பு மற்றும் விவசாயம் சார்ந்த வணிகங்களுக்கு உத்தரப்பிரதேசம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநட்டில் இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்றார் .இம்மாநாட்டின் மூலம், உத்தரபிரதேசத்தில் 35.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனடிப்படையில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு முதலீடு செய்வதற்கான உகந்த மாநிலமாக உருவாகியுள்ளதை பாராட்டி பேசினார் .மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக இருப்பதுடன், பொருளாதார பங்களிப்பிலும் பல துறைகளில் உத்தரபிரதேச மாநிலம் முதன்மையாக உள்ளது. கோதுமை உட்பட மொத்த உணவு தானிய உற்பத்தியில் உத்தரபிரதேசம் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. நாட்டிலேயே அதிக கரும்பு மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் உத்தரபிரதேசம், மாம்பழம் மற்றும் பட்டாணி உற்பத்தியிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
விவசாய விளைப்பொருட்களை போன்று, பால் உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் விவசாயப் பொருட்கள் வளமாக இருப்பதால், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உச்சிமாநாட்டின் அமர்வில் 'இந்தியாவின் உணவு உற்பத்தி திறனை மேம்படுத்துதல்: உணவுப் பதப்படுத்துதலுக்கான வாய்ப்புகள்' மற்றும் 'பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் புதிய வாய்ப்புகளைத் உருவாக்குதல்' ஆகியவை திட்டமிடப்பட்டிருப்பதைக் கண்டு குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைந்தார்.
முதலீட்டாளர்களுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டிய குடியரசுத் தலைவர், உத்தரப் பிரதேசத்தில் தற்போது நிலையான மற்றும் முடிவெடுக்கும் அரசாங்கம் இருப்பதாகக் கூறினார். உத்தரபிரதேச அரசு நீண்ட கால கொள்கைகளை கற்பனை செய்து அதன் பாதையில் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, உத்தரப் பிரதேசம் ”புதிய இந்தியா”வின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படத் தயாராகியுள்ளது எனவும் பாராட்டினார்.
நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் 95 லட்சம் MSME-கள் உள்ளன என குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், விவசாயத்திற்கு அடுத்தபடியாக MSME-கள் இரண்டாவது அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் உத்தரபிரதேசத்தின் MSME துறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறத் தீர்மானித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை உத்தரபிரதேசம் வழங்கும். உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் ”ஆத்மநிர்பர் பாரத் அபியானை” வலுப்படுத்தும் என்றார்.
வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை பராமரிக்க உத்தரபிரதேச அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கூற்றுப்படி, வளர்ந்து வரும் முதலீட்டு சூழல் சுயதொழில் கலாச்சாரத்தை அதிகரிக்கிறது. உத்தரபிரதேசத்தில் ஸ்டார்ட்-அப் புரட்சியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் உத்தரபிரதேசத்தை சுயதொழிலில் முன்னணியில் வைக்கும் என குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் "சிறந்த முதலீட்டு மாநிலம்" என்று உத்தரப்பிரதேசம் அறியப்படும் என நம்பிக்கை தெரிவித்த குடியரசுத்தலைவர் உத்தரபிரதேசம் மாநிலம் மேலும் வளமானதாக மாறினால், இந்தியாவும் அதை பின்பற்றும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க
G20: 3 நாள் கூட்டம் இந்தூரில் தொடக்கம், விவசாய பெருமக்களின் சங்கமம்
இந்திய விவசாயிகளுக்கு 5G இணையம் எவ்வாறு பயனளிக்கும்? - தெரிந்துகொள்ளுங்கள்
Share your comments