1. மற்றவை

திருமணத்தில் எஞ்சிய உணவை ஏழைகளுக்கு விநியோகம் செய்த மேற்கு வங்கப் பெண்!

R. Balakrishnan
R. Balakrishnan
West Bengal woman distrbutes food

சகோதரனின் திருமணத்தில் எஞ்சிய உணவு ஏழைகளுக்கு விநியோகம் செய்து சமூக வலைதள மனங்களை வென்றுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த நாட்களில் திருமண சீசன் முழு வீச்சில் உள்ளது மற்றும் சமூக ஊடகங்கள் (Social Medias) தங்கள் சிறப்பு நாளில் போஸ் கொடுக்கும் ஜோடிகளால் நிரம்பியுள்ளன.

எவ்வாறாயினும், திருமண விழாக்களின் கோலாகல கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஒரு பெண் எஞ்சிய திருமண உணவை ஆதரவற்றவர்களுக்கு விநியோகிக்கும் செய்யும் புகைப்படம் உதவும் நல்லெண்ணத்திற்காக வைரலாகி வருகிறது.

ஏழைகளுக்கு உணவு (Food for Poors)

மேற்கு வங்கத்தின் ரனாகாட் ஸ்டேஷனில், கோலாகலமான திருமண வரவேற்புக்கிடையில் ஒருவரின் செய்கை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. திருமண அலங்காரத்தில் ஆடை அணிந்த ஒரு பெண், நள்ளிரவு 1 மணிக்கு வரவேற்பு விருந்தில் இருந்து ஏழைகளுக்கு உணவை (Food) விநியோகிப்பதை அங்கு வந்திருந்த நிலாஞ்சன் மோண்டல் என்ற திருமண புகைப்படக் கலைஞரையும் ஈர்த்தது.

போட்டோகிராபி (Photography)

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வயதான பெண்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை, ரிக்ஷா வாலாக்கள் மற்றும் பலர், அறுசுவை உணவைப் பரிமாற அப்பெண்ணின் அருகில் கூடுவதைக் காண முடிகிறது.

அந்தப் பெண் உலோக வாளிகள் மற்றும் உணவு நிரப்பப்பட்ட பெரிய கொள்கலன்களிலிருந்து உணவை எடுத்து காகிதத் தட்டுக்களில் ஏழைகளுக்கு அவரே பரிமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் போட்டோகிராபரால் கிளிக் செய்யப்பட்டார். மோண்டல் அந்தப் பெண்ணின் பெயர் 'பாபியா கர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் தனது சகோதரரின் திருமண வரவேற்பு என்றும், ஒரு பெரிய அளவு உணவு மிச்சம் ஏற்பட்டதால் அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அதை வழங்குவதை பாபியா கர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டதாகவும் நிலாஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

உலக மண் தினம்: மண்வளம் காக்க உறுதி எடுப்போம்!

உடல் நலம் ரொம்ப முக்கியம்: வந்தாச்சு கொரோனா பால்!

English Summary: West Bengal woman distributes leftover food at wedding to the poor! Published on: 05 December 2021, 09:01 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.