வருமான வரித்தாக்கலை குறித்த நேரத்தில் செய்யத் தவறுபவர்கள் தாமதமாக வரித்தாக்கல் செய்யும் முன், அபராதம் செலுத்த வேண்டும் என்பதோடு, வரித்தாக்கலின் பல்வேறு பலன்களையும் இழக்க நேரிடும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் வருமான வரித் தாக்கலை செய்து விட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return File)
தற்போதைய வருமான வரிச்சட்டத்தின் படி, குறித்த காலத்திற்குள் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை எனில், தாமத கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். எனினும், வரிக்கு உரிய வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், 1,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. தாமதமாக வரித்தாக்கல் செய்யும் முன், இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நிதியாண்டின் இறுதிக்குள் தாமதமாக வரித்தாக்கல் செய்ய வேண்டும். இந்த கெடுவையும் தவறவிட்டால், வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பினால் மட்டுமே வரித்தாக்கல் செய்ய முடியும். தாமதாக வரித்தாக்கல் செலுத்துவதால், பல்வேறு சாதகங்களையும் இழக்க வேண்டியிருக்கும்.
பலன்கள் (Benefits)
குறித்த காலத்தில் வரித்தாக்கல் செய்தால் நஷ்ட கணக்கை எடுத்துச் செல்லலாம். மேலும், வருமான வரித்துறை திரும்பித்தர வேண்டிய தொகைக்கு மாதம் 0.5 சதவீத வட்டி உண்டு. எனினும், தாமத மாக வரித்தாக்கல் செய்யும் போது இது பொருந்தாது.
மேலும் படிக்க
Share your comments