1. மற்றவை

வாட்ஸ்அப் இனி பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி! மத்திய அரசின் கடும் எதிர்ப்பு!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Whats App Assured No Longer Compels Users! Strong Opposition From the Central Government!!

கடந்த ஜனவரி டிஜிட்டல் தளங்களில் மாதம் வாட்ஸ்அப் செயலியின் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் பல சர்ச்சைகளுக்கு வந்தது.அந்த சர்ச்சையில், புதிய கொள்கைகளை அதன் பயனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பின் அவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற தகவலை வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்தது. இதில் இணைந்த பயனர்கள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று கருதிய வாட்ஸ்அப்புக்கு எலன் மஸ்க் மூலம் ஒரு அபாய எச்சரிக்கை வந்தது. பயனர்களின் தரவுகள் பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதே அக்கொள்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார்.

மேலும், ஆன்லைன் வர்த்தகமும் கொடி கட்டி பறப்பதால் அதற்குள் நுழைந்து லாபம் பார்க்க வேண்டும் என்பது வாட்ஸ்அப்பின் இரண்டாவது நோக்கமாகும். இதனால் ஒருவரின் ரகசியங்கள் கசியக் கூடும் என்று உணர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் அதனை நீக்கிவிட்டு சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறினர்.  இதனால் உலகம் முழுவதும் பல மில்லியன்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் இழந்தது. இதனை சரிசெய்ய புதிய தனியுரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மே 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

இது அனைத்தும் அறிவிக்கப்பட்டபோது கூட அந்த கொள்கைகள் நீக்கப்படும் என்று வாட்ஸ்அப் கூறவில்லை. இனத்திற்கு பதிலாக நேரம் கொடுக்கிறோம் அதுவரையில் கொள்கைகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியது. பயனர்களின் ரகசிய உரையாடல்கள் எதுவும் பகிரப்படாது என்று உறுதியளித்தாலும் பயனர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் வாட்ஸப்பின் திருத்தப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனர்களை வற்புறுத்தி வருகிறது. இதன்போது, இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த விசாரணையில் மத்திய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த தாக்கல் செய்யப்பட்ட பாத்திரத்தில் “மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill) சட்டமாக்குவதற்குள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்தில் வாட்ஸ்அப் செயல்பட்ட்டது. நினைத்ததை முடிக்க  பயனர்களை ஏமாற்றி கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனர்களுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இது இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது. ஆகவே இதுதொடர்பான தகல்வல்களை பயனர்களுக்கு அனுப்பவதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும் என்று கண்டிப்பு இருந்தது.

இந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் வாட்ஸ் அப் புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவதை தாமாக முன்வந்து நிறுத்திவைப்பதாகவும், மத்திய அரசு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் வரை காத்திருப்பதாகவும் பேசினார். அதேபோல் அதுவரை பயனர்களை கொள்கையுடன் உடன்படுங்கள் என கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும் கூறினார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம், இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் எந்தவிதத்திலும் யாரிடமும் இன்னும் பகிரப்படவில்லை வரும் காலங்களிலும் பகிரப்படாது, என்றும் பாதுகாக்கப்படும் என்றும், மத்திய அரசிடம் வாட்ஸ்அப் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!

English Summary: Whats App assured no longer compels users! Strong opposition from the central government!! Published on: 13 July 2021, 02:16 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.