மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொரோனா சமயத்தில் இந்த அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அகவிலைப்படி இரண்டு முறை உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்த உயர்வுக்கு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களின் மற்றுமொரு எதிர்பார்ப்பு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதே.
வதந்தி
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது கிடைக்கும் என்பது தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில் அது வழங்கப்படாது எனவும் ஒருபுறம் வதந்தி பரவியது.
பரிசீலனை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை அகவிலைப்படி நிலுவை உள்ளது. இதை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், வருகிற நவம்பர் மாதத்தில் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான செட்டில்மெண்ட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
பண்டிகைக்காலம்
பொதுவாகவே, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நாட்டு மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி சமயத்தில் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பை எதிர்நோக்கி 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Share your comments