1. மற்றவை

கொரோனா தடுப்பூசி யார் போடலாம் யார் போடக்கூடாது-தகவல்

T. Vigneshwaran
T. Vigneshwaran

நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது,ஆனால் தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் சரிவை காட்டியது. வைரஸ் தீவிரத்தை தடுக்க தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. தடுப்பூசி போட்டுகொண்டாள் தான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதன் போதிலும் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சுகிறார்கள் மேலும் பலருக்கு தடுப்பூசி போடுவதில் சந்தேகம் உள்ளது.யாரெல்லாம் தடுப்பூசி போடலாம் என்று சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது

ரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் போன்ற 20 வகையான பிரச்னைகளுக்குக்கு சிகிச்சை பெறுபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.இதய செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள்,இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த்தவர்கள்,இது வென்ட்ரிகுலர் செயலிழப்பு சிகிச்சை செய்தவர்கள்,இதய அடைப்புகளுக்கு சிகிச்சை செய்தவர்கள்,பிறவி இதய குறைபாடு உள்ளவர்கள்,நீரிழிவு சிகிச்சை,உயர்ரத்த அழுத்தம்,ரத்தக் குழாயில் பெரிய அளவில் பாதிப்பு உள்ளவர்கள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

இதுமட்டுல்லாமல், 10 ஆண்டுகளாக நுரையீரல் ரத்த அழுத்த சிகிச்சை பெற்று வரும் நபர்கள்,சிறு நீரகம், கல்லீரல் பாதிப்பு சிகிச்சை பெற்று வருபவர்கள்,ஹீமோ  டையாலிசிஸ் செய்தவர்கள்,சுவாசக்குழாய் சிகிச்சை பெற்று வருபவர்கள்,ரத்த புற்றுநோய்,வெள்ளை அணுக்கள் பாதிப்பு,புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள்.சிவப்பணுக்கள் குறைபாடு,ரத்த சோகை உள்ளவர்கள்,எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள்.சிறப்பு குழந்தைகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மேலும்,மாற்றுத்திறனாளிகள்,கர்ப்பிணி பெண்கள் ,பாலூட்டும் தாய்மார்கள்,18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது.

தீவிரமான காய்ச்சல் தோற்று ஏற்பட்டவர்கள்,18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்,தடுப்பூசி போடக்கூடாது, இவர்களை தவிர,ஏற்கனவே தடுப்பூசி போட்டு அதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்களும்,கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தடுப்பூசி போட வேண்டாம். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் 6 வாரங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதி

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

English Summary: Who can and should not be vaccinated against corona -Information

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.