EPF பயனாளிகள் கடந்த ஒரு வார காலமாக இ-பாஸ்புக் (EPF Passbook) சேவையை பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். இதை EPFO தரப்பில் சரிசெய்வது ஒரு புறம் இருக்கட்டும். EPF பாஸ்புக் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
EPF பாஸ்புக் (EPF passbook)
EPF பயனாளிகள் பயன்படுத்துவதற்காக இ-பாஸ்புக் எனப்படும் ஆன்லைன் பாஸ்புக் வசதி இருக்கிறது. ஆனால், கடந்த ஒரு வார காலமாகவே பயனாளிகளால் EPF பாஸ்புக் வசதியை பயன்படுத்த முடியவில்லை என சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
EPF இ-பாஸ்புக் பயன்படுத்த விரும்புவோர் எளிதாக மொபைலில் உமாங் ஆப் (UMANG App) டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். உங்களின் EPF இருப்பு தொகை, வட்டி தொகை போன்ற விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் EPF பயனாளிகள் தங்களது கோரிக்கைகளின் நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் மொபைலில் உமாங் ஆப் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் உங்களது UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பாஸ்வோர்டை (OTP) உமாங் ஆப்பில் பதிவிட வேண்டும்.
உமாங் ஆப் (UMANG App)
- உங்கள் மொபைல் உமாங் ஆப் திறந்து அதில் EPFO தேர்வு செய்துகொள்ளவும்.
- அதில் Employee Centric Service தேர்வு செய்துகொள்ளவும்.
- அதில் உள்ள View Passbook கிளிக் செய்தால் இ-பாஸ்புக் வரும்.
மேலும் படிக்க
PF: அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
PM kisan: 14வது தவணை எப்போது கிடைக்கும்: எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள்!
Share your comments