தன்னந்தனியாக ஒரு விவசாயி கப்பல் வடிவிலான வீடு ஒன்றினை கட்டி வருகிறார். 2010ல் இருந்து, சுமார் 13 ஆண்டுகளாகத் தனது கனவு வீட்டினைக் கட்டி வருகின்றார் கொல்கத்தாவை சேர்ந்த விவசாயி. கப்பல் வடிவில் இவர் கட்டிவரும் இந்த வீடு வருகின்ற ஆண்டான 2024ஆம் ஆண்டு முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொல்கத்தாவின் ஹெலென்ச்சா மாவட்டம் நார்த் 24 பர்கானாஸ் என்ற ஊரைச் சேர்ந்தவர் மின்ட்டு ராய் என்ற விவசாயி. இவர் குறிப்பிடத்தகுந்த விவசாயி ஆவார். சுமாராக 25 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவுக்கு வந்தவர் அவரது தந்தையுடன் வசித்து வருகின்றார். தன் வீட்டை கப்பல் வடிவில் அமைக்கவேண்டும் என்று நீண்ட நாள் தனது கனவினைக் கொண்டிருந்தார் மின்ட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு கட்ட முடிவெடுத்த மின்ட்டு விவசாயி தனது ஆசையை எஞ்சினியர்களிடம் சொன்ன போது அனைவருமே இது இயலாத காரியம் என பின்வாங்கிவிட்டு இருக்கின்றனர். இதனால் தனது கனவு வீட்டை தானே வடிவமைக்க முடிவெடுத்து இருக்கிறார். உதவிக்குச் சில ஆட்களையும் சேர்த்துக்கொண்டார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இவரது சொந்த வீட்டினைக் கட்டுவதற்கு தொடங்கினார். கச்சிதமாக கப்பல் வடிவில் வீட்டை வடிவமைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை எனவும், நிறைய கடினங்கள் இருந்தன எனவும், கட்டிடக்கலையில் முறையான புரிதலும், முக்கியமாக பொறுமையும் அவசியம் எனவும் கூறினார். இதை தவிர இருந்த பெரும் பிரச்சனை, பணம். இவரிடம் பணியாற்றிய மேஸ்திரிகளுக்கு இவரால் கூலி வழங்க முடியவிலை.
இதனையடுத்து முன்று ஆண்டுகள் நேபாளம் சென்று, அங்கு வேலைப்பார்த்துக் கட்டிடக்கலை பயின்றார் மின்ட்டு. விவசாயியான மின்ட்டு தனக்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தினை வைத்து தான் வீட்டை தொடர்ந்து கட்டி வருகிறார். இதனால் பல சமயங்களில் கட்டுமானத்தினைத் தொடர முடியாமல் இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குக் கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தனது நிலத்தில் விளைந்த பயிர்களை அருகில் உள்ள சந்தையில் விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் சிறுகச் சிறுக வீட்டை கட்டி வருகிறார்.
இதுவரை இந்த வீட்டிற்கு 15 லட்சம் ரூபாய் செல்வாகியுள்ளது என தெரிவித்து இருக்கிறார். சுமார் 39 அடி நீளம், 13 அடி அகலம், 30 அடி உயரம் இருக்கிறது இந்த கப்பல் வீடு. ”அடுத்த ஆண்டு இந்த கப்பல் வீட்டை கட்டி முடிக்கவேண்டும் என்றிருக்கிறேன் என்றும் விவசாயி தெரிவித்து இருக்கிறார். அதோடு, வீட்டின் மேல் தளத்தில் எனது வருமானத்திற்காக ஒரு ரெஸ்டாரண்ட்டையும் தொடங்கவுள்ளேன்” என்றவர் வீட்டிற்கு மறைந்த தனது தாயின் பெயரை சூட்ட இருக்கிறாராம். கட்டி முடிக்கும் முன்னரே அந்த ஏரியாவில் பிரபலமடைந்துவிட்டது மின்ட்டு ராயின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments