தேனி, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவன் திரு. கார்த்திகேயன், இவரைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு, இந்தப் பதிவில் பார்க்கலாம். முன்னாள் ஐனாதிபதி, விஞ்ஞானி என்றெல்லாம் அறியப் பட்டவர், லெட். திரு. அப்துல் கலாம் அய்யாவின் மற்றொரு வித்து, திரு கார்த்திகேயன் என்று சொல்லலாம்.
கார்த்திகேயன் சிறு வயதிலே சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் கொண்டவர். இவர் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தில் மதுரை மாவட்ட ஆளுநராவும் மற்றும் ஐ.நா சபையின் பாதுகாப்பு மனித உரிமைகள் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளை வகித்து வருகிறார்.
இவர் தினம் தோறும் பள்ளிகளுக்கு சென்று பள்ளி முதல்வர் அவர்களை சந்தித்து March Towards Mars Space Technology Free Course - இலவச விண்வெளி வகுப்பு குறித்து அலோசனை வழங்கி வருகிறார். மாணவர்களுடன் கலந்துரையைாடல் நடத்தும்பொழுது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களுக்கு மரம் வளர்ப்பது குறித்து கூறுவார். தினத்தோறும் பாடப்புத்தகம் அல்லது கதை புத்தகம், ஏதேனும் ஒரு புத்தகத்தை தினமும், இரு பக்கங்களாவது படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கூறி, அவர்களை சிந்திக்க செய்துடுவார். பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றார்.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும்,நேரம் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு.!
அவர் கூடபடிக்கும் சக மாணவர்களையும் சமூக சேவையில் ஈடுபடுத்தி உள்ளார். வளமான, இந்திய உருவாக, ஒரு வித்தாக செயலாற்றுகிறார், திரு. கார்த்திகேயன். மேலும் இவர், மாணவர்களைச் சந்திக்கும் போது அவர்களுக்கு கலாம் அய்யாவின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை வழங்கு ஊக்கப்படுத்துகிறார். அவர் மேலும் மரக்கன்றுகளை நடும் சேவை, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தேவையான உதவி, அவர்களை தமிழகத்திற்கு மீட்பு பணி போன்ற சேவைகளையும் செய்து வருகிறார். கலாம் கார்த்திகேயன் என்று தனது பெயரை அப்துல் கலாமின் மீதுள்ள பற்றினாள் மாற்றிக் கொண்டார். தமிழர்களுக்கு எப்போதும் முன்னோடியாக திகழும் அய்யா அப்துல் கலாம்-இன் மற்றொரு விதை திரு. கார்த்திகேயன் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
HDFC: சென்னையில் 100 பேரின் வங்கிக் கணக்கில், தலா ரூ.13 கோடி, மக்கள் அதிர்ச்சி!!
Share your comments