எல்லா சீசனிலும் விளையும் தேங்காயிலிருந்து, தாய்ப்பாலுக்கு நிகரான இன்பம் வெர்ஜின் தேங்காய் எண்னெய் தயாரித்து சிறப்பான முறையில் சந்தைப்படுத்தி வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த சா.வெ.காமராசு.
அறுசுவை உணவுகளை சமைக்கும் போது, அதில் இன்றியமையாததாக எண்ணெய் இருந்து வருகிறது. பொதுவாக மருத்துவர்கள் கூறும்போது சமையல் எண்ணெயை அறவே கூடாது என்பர். ஆனால், மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஒரு அற்பத எண்ணெயாக வெர்ஜின் தேங்காய்பால் எண்னெய் உள்ளது. இந்த எண்ணெய் தாயாரித்து சந்தைப்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சா.வி.காமராசு (S.V Kamarasu) உங்கள் கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதளம் முன்னெடுத்துள்ள ''Farmer The Brand'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
25 ஆண்டுகளாக தென்னை விவசாயத்தில் ஈடுபட்டும் வரும் சா.வி.காமராசு, நக்கீரர் தென்னை கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார், இதன் மூலம் 1500 தென்னை விவசாயிகளுடன் இணைந்து தேங்காயில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறார். மேலும், உரித்த தேங்கய், கொப்பரை தேங்காய், பச்சை தேங்காய், மட்ட தேங்காய், தேங்காய் ஓடு, தேங்காய் பருப்பு உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்தும் சந்தைப்படுத்தப்படுகிறது.
இன்பம் வெர்ஜின் எண்ணெய்
தேங்காய்களை உலர்த்தி செக்கிலிட்டு எண்ணெய் எடுக்கும் முறைக்கு மாறாக, எந்தவொரு இராசாயன கலப்பும் இன்றி எண்ணெய் எடுத்து இன்பம் வெர்ஜின் எண்ணெய் (Inbam Virgin coconut oil) என்ற பெயரில் சந்தைப் படுத்தி வருகிறார் காமராசு.
செய்முறை
வெர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு முறையில், தேங்காயில் ஈரப்பதத்தை போக்க உலர வைக்க தேவையில்லை. மாறாக, தேங்காயில் இருந்து பால் பிழிந்து எடுத்து அந்த தேங்காய் பாலை அடுப்பில் காய்ச்சி எண்ணெய் சேகரிக்கின்றனர். இந்த எண்ணெய் தயாரிப்பு முறையில் இரசாயனக் கலப்புக்கு அவசியம் இல்லை.
வெர்ஜின் எண்ணெய் விற்பனை
தமிழகத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது இன்பம் வெர்ஜின் எண்ணெய் சந்தைப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஒரு லிட்டர் (1l) எண்ணெய் ரூ.600க்கும், அரை லிட்டர் (500ml) எண்ணெய் ரூ.300க்கும், 200ml வெர்ஜின் எண்ணெய் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுவதாக காமராசு தெரிவித்தார்.
வெர்ஜின் தேங்காய் எண்ணெய் பயண்கள்
-
தாய்ப்பாலில் மட்டுமே காணப்படும் 'லாரிக் அமிலம்' என்னும் வேதிப்பொருள் 50% வெர்ஜின் எண்ணெயில் உள்ளது.
-
இது மனிதர்களுக்கு மற்றொரு தாய்ப்பாலாக கருத்தப்படுகிறது.
-
இந்த வெர்ஜின் தேங்காய் எண்ணெய், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை நம் உடலுக்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
-
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதுடன், சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
-
மாரடைப்பு, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது.
-
வளர்ச்சிதை மாற்றத்திற்கும், தைராய்டு உள்ளிட்ட சுரப்பிகள் சரிவர இயங்க வெர்ஜின் எண்ணெய் உதவுகிறது.
-
உடல் எடை குறைக்கவும், தோள் மினுமினுப்பு அதிகரிக்கவும் வெர்ஜின் எண்ணெயை பயன்படுத்தலாம்.
-
தீக்காயம், தழும்பு போன்றவற்றிற்கு இந்த எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க ....
#FarmertheBrand: மண்ணை பொன்னாக்கும் புதுக்கோட்டைப் பெண்மணி!
சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!
Share your comments