தென்னை காப்பீடு

Thursday, 20 August 2020 08:26 PM , by: Elavarse Sivakumar
Coconut

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்னை சாகுபடி செய்யப்பட்ட போதிலும், உயர்ந்து, வளர்ந்த தென்னை மரங்களை, மழை மற்றும் புயலில் இருந்துப் பாதுகாப்பது என்பது, சவால் மிகுந்த ஒன்றாகும். அவ்வாறு இயற்கை சீற்றங்களால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்படும்போது, கச்சிதமாகக் கைகொடுக்கிறதுக் காப்பீடு.

சிறப்பு அம்சங்கள் (Insurance specialities)

தென்னை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்த ஒரு காப்பீட்டுத் திட்டம்.
தென்னைக்கு ஏற்படும் பொருளாதார சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
அதிகபட்ச கடன்தொகையானது மரத்தின் வயதைப் பொருத்தது.

காப்பீடு (Insurance)

தடுக்க முடியாத, பாதகமான இயற்கை காரணிகளால் ஏற்படும் மரத்திற்கான இழப்பு அல்லது (மற்றும்) காய்க்கு ஏற்படும் சேதத்திற்கான இழப்பை இத்திட்டத்தின் கீழ் பெறலாம்.

தேங்காய் மகசூலுக்கான காப்பீடு (Insurance for coconut yield)

இயற்கை சீற்றங்களான, இயற்கையான தீ விபத்து, மின்னல் தாக்குதல், புயல், பனித்தூறல், சூறாவளி, மணற்சுழற்சி, வெள்ளம், நீர்த்தேக்கம், நிலச்சரிவு மற்றும் பூச்சி அல்லது நோய் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் காய் இழப்பிற்கு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மரத்திற்கான காப்பீடு (Insurance For coconut Tree)

4 - வருடத்திலிருந்து, 60வருடம் வரை, காப்பீடு செய்யப்பட்ட மரத்திற்குச் சேதம் ஏற்பட்டால், திட்டத்தின் கீழ் இழப்பீடு அளிக்கப்படும்.

முதல் வருடத்தில், நட்டு மூன்று மாதங்கள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராது.
இழப்பீடானது, தனிமர ரீதியில் அளிக்கப்படும். இயற்கை சீற்றங்களான இயற்கையான தீவிபத்து, மின்னல் தாக்குதல், புயல், பனித்தூறல், சூறாவளி, மணற்சுழற்ச்சி, வெள்ளம், நீர்த்தேக்கம், நிலச்சரிவு மற்றும் பூச்சி அல்லதுநோய் அனைத்திற்கும் காப்பீடு அளிக்கப்படும்.

உறுதித்தொகை (Assured Amount)

மகசூல் காப்பீட்டிற்கு - வட்டத்திற்கு வட்டம் மாறுபடும். கடந்த வருட காயின் விலையுடன், உத்திரவாதமான மகசூலை பெருக்கி, உறுதித்தொகை நிர்ணயிக்கப்படும். மர காப்பீட்டிற்கு - தோட்டத்தின் வயதைப்பொறுத்து, இடுபொருள்களுக்கான செலவு, உறுதித்தொகையாக நிர்ணயிக்கப்படும்.

பீரிமியம் (Premium)

ஒவ்வொரு வட்டத்திற்கான முற்குறிப்பிலிருந்து, நிர்ணயிக்கப்படும்
காப்பீடு பெற யாரை அணுகலாம்

தமிழகத்தைப் பொறுத்தவரை, டெல்டா (Delta Districts) மற்றும் கொங்கு மண்டல மாவட்டங்களில் , எத்தனை தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில், காப்பீடு செய்யலாம்.

எந்தப்பகுதியில் அதிக விளைச்சல் இருக்கிறதோ, அதனைச் சேர்ந்த விவசாயிகள், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து, முதலில் அடங்கல் பெற வேண்டும்

அதில், எத்தனை தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன, சொட்நீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பு நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல்களை இடம்பெறச் செய்தல் அவசியம்.
பிறகு, பாதிக்கப்பட்ட நிலத்தின் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை ஆகியவற்றைக் காண்பித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அதனைக் கொண்டு சென்று, மக்கள் பொதுச் சேவை மையம் அல்லது இ-சேவை மையத்தில், அந்த மாவட்டத்திற்கு எவ்வளவுத் தொகையை ப்ரியமாக அறிவித்திருக்கிறார்களோ, அந்தத் தொகையை செலுத்திக் காப்பீட்டைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கும் ரசீதும் வழங்கப்படுகிறது. இதுவே நீங்கள் காப்பீடு செய்ததற்கான ஆதாரம்.

ஒருவேளை இந்தப் பகுதியில், கொட்டித் தீர்த்த கனமழை, புயல், சூறாவளிக்காற்று போன்றவற்றால், மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த காப்பீடு பலன் தரும்.

இழப்பீடு வழங்கும் முறை (Compensation Claim)

பாதிப்பு ஏற்பட்ட பிறகு, தங்கள் தென்னைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீண்டும், கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட வேண்டும். அவர் பாதிக்கப்பட்ட அவர் ஆய்வு செய்து, தனதுக் கருத்தை வட்டாட்சியருக்கு அனுப்புவார்.

வட்டாட்சியர் வேளாண்துறை அதிகாரியை அனுப்பி பார்வைட்டு, பாதிப்பு உண்மைதான் என்பதை அங்கீகரிக்கும் பட்சத்தில், வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார்.

இதன்பிறகுதான், தென்னை பாதிப்பு என்பது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், அப்பகுதி முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் குழு நேரில் சென்று ஆய்வு செய்யும்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அல்லது மாநில அரசின் திட்டங்களில் எந்த திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது என்பதை உறுதி செய்வார்கள்.

பின்னர் தேர்வு செய்யப்படும் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்வார்கள்.

அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு அதிகத் தொகை இழப்பீடாக வழங்கப்படும்.

பாதுகாக்க வழிகள் (Way to Protect)

அதிகப்படியான மழை வருவது தெரிந்தால், தென்னையைப் பொருத்தவரை, பத்து பதினைந்து தென்னை மட்டைகளை விட்டுவிட்டு மற்றவைகளை வெட்டிவிடலாம். இதன் மூலம் பாதிப்பு வரும்முன் தென்னை மரங்களை பாதுகாக்கவும் செய்ய முடியும்.

தென்னை சாகுபடி மழையில் பாதுகாப்பது கடினம் இழப்பீடு செய்ய வேண்டியது கட்டாயம்
English Summary: Coconut insurance

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.