நாகப்பாம்பை மரணத்திலிருந்து காப்பாற்ற கால்நடை மருத்துவர்கள் சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்தி அதன் உயிரை மீட்டுள்ளனர்.ஒடிசா மாநிலம் பூரி எனும் மாவட்டத்தில் உள்ள தெலங்கா எனும் ஊரில் வசிக்கும் ஒருவர் தனது குடோனில் நிலக்கரித் தார் ஆங்காங்கு சிதறிக் கிடந்தது.
அதன் தடம் பார்க்கும்போதே பாம்பு சென்ற வழி போல் இருப்பது போன்று அவருக்குத் தோன்றியது. இந்த எண்ணம் அவரைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. அந்த தடத்தினைப் பின்தொடர்ந்தே சென்றிருக்கிறார், அந்த நபர். அப்பொழுது அவர் கணித்தது போன்றே ஒரு நாகப் பாம்பைக் கண்டார்.
அந்த நாகப் பாம்பு நிலக்கரித் தாரில் சிக்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பு மீட்புப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு வரவழைத்திருக்கிறார். ஆனால் அவர்களால் தாரில் சிக்கிய பாம்பினை மீட்க முடியவில்லை.
அதன் பின், பாம்பு செய்தித் தாள்கள் கொண்டு சுற்றப்பட்டுக் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புக் கல்லூரியில் உள்ள கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புக் கல்லூரியில் உள்ள கால்நடை அறுவை சிகிச்சை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குக், கால்நடை அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியரான டாக்டர் இந்திரமணி நாத் மற்றும் அவரது குழுவினர் பாம்பினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள், பாம்பின் உடம்பில் உள்ள தாரை அகற்ற சூரியக் காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினர். அதாவது, சூரிய காந்தி எண்ணெயைப் பாம்பின் மீது தடவி, அதன் பின் அந்த தாரைப் பாம்பின் உடலுக்கு எந்த விதப் பக்க விளைவும் இன்றிக் கவனமாக அகற்றினர். இந்த சிக்கலில் இருந்து நாகப் பாம்பை விடுவிக்க 90 நிமிடங்கள் ஆனது. இறுதியில் நாகப் பாம்பு எவ்வித சிக்கலும் இல்லாமல் உயிர்க்கு ஆபத்து இன்றி மீட்கப்பட்டது
அந்த பாம்பின் மீது படிந்திருந்த நிலக்கரித் தாரை நீக்க சூரிய காந்தி எண்ணெய் பயன்பட்டுள்ளது. எண்ணெயின் வழவழப்புத் தன்மையினால் பாம்பின் உடலுக்கு எந்த சேதமும் இல்லாமல் மீட்க முடிந்தது என கால்நடை பராமரிப்புத் துறை பேராசிரியரும், அவர் குழு உறுப்பினர்களும் கூறினர். கால்நடைப் பராமரிப்பு துறையுடன் பாம்பு மீட்புப் பணியாளர்களும் இந்த உயிர்க்காப்புப் பணியில் இருந்துள்ளனர்.
மேலும் படிக்க...
சூரியகாந்தி எண்ணெய் கிடைக்காதாம்: வேற எண்ணெய்க்கு இப்பவே மாறிடுங்க!
Share your comments