1. கால்நடை

கால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Kisan credit card for dairy farmers to be issued to 41 lakh people soon!
Credit: Dairy Today

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.150 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி 41 லட்சம் கால்நடை விவசாயிகளுக்கு விரைவில் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையில் கடந்த ஆண்டில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் அறிவிப்பு (Prime Minister's announcement)

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நீதி தற்சார்பு இந்தியா தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.15.000 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பால்வளம், இறைச்சிப் பதனிடுதல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகளுக்கும், தனியார் துறையில் விலங்குத் தீவன ஆலையை நிறுவுவதற்கும், கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி வழி வகுக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

தகுதியான பயனாளிகளுக்கு 3 சதவீதம் வட்டித் தள்ளுபடி வழங்கப்படும். இதுவரை இந்த நிதித் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தகுதியான பயனாளிகள் https://ahidf.udyamimitra.in/ என்ற இணையதளத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்.

தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்பு திட்டம் (NAIP) 

இரண்டாவது கட்ட தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்புத் திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 604 மாவட்டங்களில் (ஒரு மாவட்டத்திற்கு 50,000 கால்நடைகள்) தொடங்கியது. இதுவரை 264 லட்சம் செயற்கை கருத்தரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இதன் வாயிலாக 173 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 கடன் அட்டை  (Credit Card)

கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ.2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள்.

41 லட்சம் (41 Lakh)

இதுவரை பால் சங்கங்களிடமிருந்து 51.23 லட்சம் விண்ண ப்பங்கள் பெறப்பட்டு, 41.40 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு விரைவில் கிசான் கடன் அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்!

ஓஹோவென விற்பனையாகும் ஒட்டகப்பால்- லாபம் தரும் சிறந்த தொழில்!

மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!

English Summary: Kisan credit card for dairy farmers to be issued to 41 lakh people soon! Published on: 19 January 2021, 05:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.