1. கால்நடை

குடற்புழு தாக்குதலில் இருந்து மாடுகளைக் காக்க இயற்கை மருந்து!

Deiva Bindhiya
Deiva Bindhiya

கால்நடை விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாகப்பாதே சவால்மிகுந்த ஒன்றாகும். இதை அவர்கள் திறண்பட செய்தால் மட்டுமே, நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். அந்த வகையில், மாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, குடற்புழுக்களை இயற்கையாக நீக்குவது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
(வளர்ந்த ஒரு மாட்டிற்கான அளவுகள்)

  • சோற்றுக்கற்றாழை       - 2 கைப்பிடி
  • பிரண்டை                      - 1 கைப்பிடி
  • குப்பைமேனி                 - 1 கைப்பிடி
  • துளசி                             - 1 கைப்பிடி
  • வேப்பிலை                     - 1 கைப்பிடி
  • கருஞ்சீரகம்                    - 10 கிராம்
  • விரலிமஞ்சள்                  - 3 இன்ச் நீளம்

தயாரிக்கும் முறை (Preparation)

சோற்றுக்கற்றாழை மடல்களை எடுத்து, முட்களை மட்டும் நீக்கிவிட்டு, தோலுடன் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களையும், நன்கு இடித்துக் கலவையாக்கி சிறு உருண்டையாக பிடித்து மாட்டிற்குத் தரவும். மருந்து தயாரித்து ஒரு மணி நேரத்திற்குள் மாட்டிற்கு தருவது சிறந்த பலனைத் தரும். தயாரித்து கையிருப்பு வைக்ககூடாது.

அளவு  (Quantity)

இந்த மருந்தை நன்கு வளர்ந்த மாடுகளுக்கு ஒரு நெல்லிக்காய் அளவும், ஆடுகளுக்கு அதில் பாதி அளவும் கொடுக்கலாம்.

குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்ததில் இருந்து 3நாட்களுக்கு பிறகு மீண்டும் மருந்தைக் கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

கடைப்பிடிக்க வேண்டியவை (To be follow)

குடற்புழு நீக்கம் செய்வதற்கு, முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் பசுந்தீவனம், வைக்கோல், அடர்தீவனம் என எதுவும் தரக்கூடாது.

காலை வெறும் வயிற்றில் மருந்தைக் கொடுத்து, இரண்டு மணிநேரம் கழித்து தீவனம் தரவேண்டும். தீவனம், அடர்தீவனம் மட்டுமே அப்போதைக்கு கொடுத்துவிட்டு, மாலை ஆனபிறகு பசுந்தீவனம் கொடுக்கலாம்.

இரைப்பையில் உணவு குறைவாக இருக்கும்பட்சத்தில், குடலில் இருக்கும் புழுக்களை முழுவதுமாக வெளியேற்ற, இச்செயல்முறை உதவும்.

இயற்கை வழியின் முக்கியத்துவம்:

குடலில் உள்ள புழுக்கள் மட்டுமே வெளியேற்றப்படும். குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் என்சைம்கள் அழியாது.

இரசாயன குடற்புழு நீக்க முறையால், குடற்புழுக்கள் அம்மருந்தை தாங்கி வளரும் எதிர்ப்புத் திறனை நாளடைவில் பெற்று விடுவதால், வெவ்வேறு மருந்துகளை மாற்றித்
தரவேண்டியிருக்கும்.

இயற்கை மருந்துகளால் கருச்சிதைவு மற்றும் உடல் எடை இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.

மேலும் படிக்க:

PM SVANidhi திட்டம்: தெருவோர வியபாரிகளுக்கானது...

தவறு செய்து வைரலாகும் மாணவர்கள் மத்தியில், உன்னத பணியாற்றிய மாணவர்கள்!

English Summary: Natural medicine to protect cows from worm attack!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.