கால்நடைகளை இலம்பி தோல் நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், கால்நடை விவசாயிகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்ததுதான் இந்த இலம்பி" தோல் நோய் (LUMPY SKIN DISEASE). இந்நோய் பூச்சிகடி மூலம் பரவுகிறது.
இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்து விடும்.
கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிப்பதன் மூலம் இந்நோய் தாக்காமலும் மற்ற கால்நடைகளுக்கு பரவாமலும் தடுக்கலாம்.
பரவுகிறது எப்படி? (How to Spread)
கொசு கடி, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது
கன்று கட்டிகள் பாதிக்கப்படாதபோதிலும், நோயால் பாதிக்கப்பட்ட தாயின் பாலை அருந்தும்போதும் பரவுகிறது.
அறிகுறிகள் (Symptoms)
-
கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள். கடுமையான காய்ச்சல் இருக்கலாம்.
-
மாடுகள் சோர்வாக காணப்படலாம்.
-
இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும்.
-
உடல் முழுவதும் சிறு கட்டிகளாக வீக்கம் காணப்படும்.
-
உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து சில் வெளியேரும்.
-
கால்கள் வீங்கி இருக்கும்
சிகிச்சை (Treatment)
இந்த நோய்க்கு தற்போது தடுப்பூசி கிடையாது. அதனால் வரும் முன்பு காப்பதே நல்லது.
உடலில் ஏற்படும் வீக்கங்களையும், காயங்களையும் தகுந்த சிகிச்சை மூலம் குணமடையச் செய்யலாம்.
நோய் அறிகுறித் தென்பட்ட உடனேயே, அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது.
வாய்வழி மருத்துவம்
வெற்றிலை - 10 எண்ணிக்கை
மிளகு - 10 கிராம்
கல் உப்பு - 10 கிராம்
வெல்லம் - தேவையான அளவு
தயாரிப்பு (Preparation)
இவை அனைத்தையும் அரைத்து தேவையான அளவு மாட்டின் நாக்கில் தடவி விட வேண்டும்.
முதல் நாள், இரண்டாம் நாளில் இருந்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை தர வேண்டும்.
வெளிப்பூச்சு மருந்து
குப்பை மேனி இலை - 1 கைப்பிடி
வேப்பிலை - 1 கைப்பிடி
துளசி இலை - 1 கைப்பிடி
மருதாணி இலை - 1 கைப்பிடி
மஞ்சள் தூள் - 20 கிராம்
பூண்டு - 10 பல்
வேப்பெண்ணை - 500 மிலி
இவை அனைத்தையும், 500 மிலி வேப்ப எண்ணையில் கலந்து கொதிக்க வைக்கவும். பின்னர் ஆறவைத்து, காயங்களைச் சுத்தப்படுத்தி பின்பு, மருந்தை மேல் பூச்சாக தடவி விட வேண்டும்.
மேலும் படிக்க...
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
Share your comments