பருவமழையின் தாக்கம் மிதமான அளவில் காணப்படும்போது கோழிகளில் இறக்கை அழுகல் நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. இது ஒரு நுண்ணுயிரி நோய். இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், கோழிகள் இறக்கும் நிலை உருவாகும்.
நோய் பரவலைத் தடுக்கும் வழிகள் (Ways to prevent the spread of disease)
-
எனவே இந்த நோய் பரவாமல் தடுக்க முதலில் பண்ணைகளை சுகாதாரமாக பண்ணையாளர்கள் பராமரிக்க வேண்டும்.
-
பிறகு கோழிகளுக்கு வழங்கப்படும் நீரில் நச்சு கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.
-
தண்ணீரில் கிருமிகள் இருப்பது தெரியவந்தால், கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும்.
-
இறக்கை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கால்நடை மருத்துவரின் ஆலோசனைபேரில் மருந்துகளை தீவனத்தில் சேர்த்து வழங்க வேண்டும்.
-
தீவனத்தில் ஜீரணிக்கும் எரிசக்தி அளவை உயர்த்தி வழங்க வேண்டும்.
-
சமீபத்தில் பெய்த மழையில் வைக்கோல் மற்றும் சோளத்தட்டில் ஈரத்தின் காரணமாக, பூஞ்சான நச்சு காணப்படும்.
-
இவற்றை நன்கு உலர வைத்த பின்பு கொடுப்பதன் மூலம் நச்சு தாக்கத்தில் இருந்து கால்நடைகளை குறிப்பாக கறவை மாடுகளை பாதுகாக்கலாம்.
-
பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவன மூலப்பொருட்களில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, தீவன மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
நாட்டு மருந்து (traditional medicine)
எல்லா காலங்களிலும் கோழிகளை நோய் தொற்றிலிருந்து காக்கும் அருமருந்து ஒன்று உள்ளது. இதனை மழை காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்து காலங்களிலும் கொடுக்கலாம். அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து.
தேவையான பொருட்கள் (required things)
-
துளசி இலை
-
தூது வலை இலை
-
கற்பூரவள்ளி இலை
-
முல் முருங்கை இலை
-
பப்பாளி இலை
-
கொய்யா இலை
-
வேப்ப இலை
செய்முறை (Preparation)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலைகளையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக்கி 4 மாத கோழிகளுக்கு (0.75 g) என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
பின்குறிப்பு
எப்பொழுது எந்த மருந்து தேவைப்பட்டாலும் உடனுக்குடன் தயாரித்து பயன் படுத்தவும்.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்!
ஓஹோவென விற்பனையாகும் ஒட்டகப்பால்- லாபம் தரும் சிறந்த தொழில்!
மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!
Share your comments