கடைசி காலத்தில் பணப் பிரச்சினை இல்லாவல் வாழ்வதற்கு உங்களுக்கு பென்சன் தொகை பெரும் உதவியாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பென்சன் கிடைக்கும் என்று இல்லை. தனியார் துறை ஊழியர்களுக்கும் பென்சன் உள்ளது. தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் பங்குச் சந்தை சார்ந்தும் நிறைய முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் தேசிய பென்சன் திட்டம் (NPS). இது ஒரு தன்னார்வ ஓய்வு சேமிப்புத் திட்டமாகும்.
தேசிய சேமிப்புத் திட்டம் (National Savings Scheme)
தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும்.
18 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒரு நபர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒன்னொரு கணக்கு வேண்டும் என்றால் அடல் பென்சன் யோஜனா என்ற திட்டத்தில் வேண்டுமானால் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு இவ்வாறு முதலீடு செய்தால் உங்களுக்கு கடைசிக் காலத்தில் உங்களுக்கு ரூ.1.91 கோடி கிடைக்கும்.
பென்சன் (Pension)
உதாரணமாக, உங்களுடைய 20ஆவது வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் 40 வருடங்களுக்குப் பிறகு மாதத்துக்கு ரூ.63,768 பென்சன் கிடைக்கும். 6 சதவீத ரிட்டன் கணக்கீட்டில் இந்த பென்சன் உங்களுக்கு வந்துசேரும். கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேர் சேமிப்பு மற்றும் பென்சன் திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தேசிய பென்சன் திட்டத்தில் நிறையப் பேர் முதலீடு செய்கின்றனர்.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போ தான் வரும்?
இந்தியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை இத்தன கோடியா? மத்திய அரசு தகவல்!
Share your comments