விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு, நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட், தங்கத்தின் விலையில் திடீர் சரிவு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், சேவல் வடிவில் காய்கறிகள்! இதைக் காண மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர், 2.5 ஏக்கரில் 14,451 கிலோ மகசூல் செய்த பெண்ணுக்கு விருது, அரசுப் பேருந்துகளில் பயணத்தை எளிமையாக்கும் ஆப் அறிமுகம் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
1. விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து தரும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட அரசு ஆணை பிறப்பித்தது. தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்களை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டாலோ அதற்கு ஆகும் கூடுதல் செலவை அந்த விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 90030 90440 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை
2. நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால், அனுமதிக்கப்பட்ட 17 %க்கு மேல் நெற்பயிர் ஈரப்பதம் அதிகரிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நிரந்தரமாக 23% ஈரப்பதத்தை அரசிதழில் வெளியிட்டு அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். “கணிக்க முடியாத தட்பவெப்ப நிலை காரணமாக மழை பெய்கிறது. எனவே, அதிகபட்ச ஈரப்பதத்தைத் தற்போதைய 17 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்த்த வேண்டும், அதற்கு மட்டுமின்றி, மேலும் “மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறித்த அனைத்துப் பதிவுகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வைத்திருக்கிறது. ஈரப்பதத்தை அதிகரிக்க விவசாயிகள் முறையிட மாநில அரசு காத்திருக்க வேண்டியதில்லை. கனமழை அல்லது பனி பெய்யும் போது, விவசாயிகளின் நலனுக்காக பயிர்களின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளனர்.
3. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட்!
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் முலம் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000/- பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும், ஆதார் அட்டை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் முலம் ரூ.2000/ மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை மனவளர்ச்சி குன்றியோர், தசைசிதைவு நோயால் திக்கப்பட்டோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டையினை அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட இவ்வலுவலகத்தின் முலம் மேற்கண்ட பராமரிப்பு உதவித்தொகை பெறும் பயனாளிகளில் இது வரை ஆதார் அட்டை விவரங்களை சமர்ப்பிக்காத அனைத்து மாற்றுத் திறனாளிகளும் வரும் பிப்ரவரி 10-க்குள் சமர்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
4. தங்கத்தின் விலையில் திடீர் சரிவு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டது. பட்ஜெட்டில் விதிக்கப்ப்டட வரி காரணமாக, ஒரு சவரன் தற்போது 44 ஆயிரத்தைத்தாண்டியிருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தைத் தாண்டியது. ஆனால் நேற்று திடீரென்று சரியத் துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ. 43,520-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலைச் சரிவு தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
மேலும் படிக்க: இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை
5. சேவல் வடிவில் காய்கறிகள்! இதைக் காண மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திண்டுக்கல் சிறுமலை மாஞ்சக்காடு பகுதியில் விவசாயி தனுஷ்கோடி, என்பவர் தோட்டத்தில் சவ்சவ் காய்கறியைப் பயிரிட்டு இருந்தார். அவை நன்கு வளர்ந்திருந்த நிலையில் அறுவடை செய்தார். அவற்றில் ஒரு சவ்சவ் சேவல் வடிவில் இருக்கிறது. தலையில் கொண்டை,கால் உள்ளிட்ட சேவல் வடிவத்தில் இருக்கிறது. இதைக் கண்ட அவர் தன் அலைப்பேசியில் அதனை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
6. 2.5 ஏக்கரில் 14,451 கிலோ மகசூல் செய்த பெண்ணுக்கு விருது!
பதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் விளைச்சலில் சாதித்த பெண் விவசாயிக்கு தமிழக முதல்வர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலக்கல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தா. இவர், ஆலவயல் பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் சுமார் 2.5 ஏக்கரில் கடந்த ஆண்டு செம்மை நெல் சாகுபடி எனும் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி சாகுபடி செய்திருந்தார். மாநில அளவில் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருதைப் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தாவை விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.
7. அரசுப் பேருந்துகளில் பயணத்தை எளிமையாக்கும் ஆப் அறிமுகம்!
அரசு விரைவுப் பேருந்துகள் வரும் இடம், பயணம் குறித்த தகவல்களை சென்னை பஸ் ஆப் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் App மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.
இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு சென்னை பஸ் ஆப் மூலம் இச்சேவை விரிவு படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம் மற்றும் பேருந்து தடம் குறித்த Search Route option-யை க்ளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
8. நாமக்கலில் 50 ரூபாய்க்கு இலவச பெட்ரோல்! குவியும் வாகன ஓட்டிகள்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வருகின்ற 06-ம் தேதி வரை இலவச பெட்ரோல் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பெட்ரோல் நிரப்ப ஏராளமானோர் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சலுகையை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருமுறை கடவு எண் வரும். அதனை மீண்டும் பதிவிட்டால் வாகனத்திற்கு 50 ரூபாய்க்கான பெட்ரோலை இலவசமாக பெறலாம். இந்த சலுகை இந்த மாதம் 6-ம் தேதி வரை உள்ளது.
மேலும் படிக்க:
இறால் வளர்ப்பு 60% மானியம்|35% மானியக் கடன்|15000 ஏக்கர் நெற்பயிர்கள்|வங்கி மேளா|ஆவின்|தங்கம் விலை
விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை
Share your comments