Drone Subsidy:ட்ரோன் வாங்க 50% மானியம் அரசு அறிவிப்பு, TNEB: இலவச மின் இணைப்பு பெறுவோருக்கு புதிய அறிவிப்பு, PMFBY: விவசாயிகளின் பயிர்காப்பீடு செய்யும் காலவரம்பு நீட்டிக்க கோரிக்கை, சென்னையில் நடைபெற்ற சுகாதார மாநாடு: கலந்துகொண்டார் மு.க. ஸ்டாலின், அறநிலையத்துறை பள்ளி கல்லூரியில் காலை சிற்றுண்டி திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், லட்சம் ரூபாய் வருமானம் தரும் வாத்து வளர்ப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
Drone Subsidy: ட்ரோன் வாங்க 50% அரசு மானியம்!
விவசாயிகளுக்கு ட்ரோன்கள் வாங்க 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் 5 லட்சம் ரூபாய் வரை பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு ட்ரோன்-ஐ இயக்க KVK சார்பில் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும், இத்தகைய பயிற்சிகளைப் பெறுவதற்கு அறிவிப்பு வந்தவுடன் விவசாயிகள் digitalsky.dgca.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை இயக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நல்ல வருமானத்தினைப் பெறலாம் எனவும், இத்தகைய பயிற்சிக்கு விவசாயிகள் 5 நாட்கள் செலவிட்டால் போதும் அதாவது 40 மணிநேரத்தில் ட்ரோன் இயக்குதலைக் கற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
TNEB: இலவச மின் இணைப்பு பெறுவோருக்கு புதிய அறிவிப்பு!
இலவச மின் இணைப்பு பெறும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண், மின் நுகர்வோர் எண் ஆகியவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என நீதிமன்றங்கள் எத்தனை முறை தீர்ப்பு வழங்கினாலும், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவோர், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இலவச மற்றும் மின்சாரத்தில் முறைகேட்டைத் தடுக்க, மின் நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் மின்வாரியம், நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அரசின் இந்நடவடிக்கையை உணர்ந்துகொண்டு, விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
PMFBY: விவசாயிகளின் பயிர்காப்பீடு செய்யும் காலவரம்பு நீட்டிக்க கோரிக்கை!
பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டு காலவரம்பை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சுகாதார மாநாடு: கலந்துகொண்டார் மு.க. ஸ்டாலின்!
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சுகாதார மாநாடு 2022 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இது நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஊரகப் பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக் கூடிய ஏழை எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறநிலையத்துறை பள்ளி கல்லூரியில் காலை சிற்றுண்டி திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் படிக்க
PM Kisan அப்டேட் முதல் ரூ.30,000 மழை நிவாரணம் வரை!
PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
Share your comments