செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்ணிள்கேற்ப உரம் அளித்தால், உயர் விளைச்சலைப் பெற முடியும்.
மண்ணிற்கு ஏற்ற உரம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் கிராமத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குநர் கார்த்திகேயன் (மத்திய திட்டம்) களப்பணியாளர்கள் மண் மாதிரிகள் சேகரிப்பு (Soil Sample) முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மண்ணின் தன்மை மற்றும் தேவையை அறிந்து மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறு உரம் இடுவதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் பற்றாக்குறையின்றி உரிய நேரத்தில் கிடைக்குமாறும் உடனிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வு
செங்கல்பட்டில் இயங்கிவரும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். இதுபோன்று திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கீரப்பாக்கம் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்த நெல் வயலில், களையெடுக்கும் கருவிகளை கொண்டு களை நீக்கும் பணியை பார்வையிட்டார். மத்திய மற்றும் மாநில திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க
உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments