
Crop insurance for Rabi 2022-23 season: Collector appeals
நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16/- 15.6.22க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1990.82/- 15.06.2022க்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன்பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் பெறாத விவசாயிகல் பொது சேவை மைங்களில் முன்மொழிவு விண்ணப்பித்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
உழவர் நலத்துறை சார்பாக சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
Share your comments