2022 ம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும், விரைவில் புதிய சட்டமன்றம் கட்டும்பணி துவங்கும் எனவும் போன்ற அறிவிப்புகளைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார். அப்போது அவர்; புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்ற தகவலும் கூறப்பட்டது. 2022 ம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையினைத் தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும் என அறிவித்த முதல்வர், நலிவடைந்த கூட்டுறவு நிறுவங்களை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் அரசின் இலவச துணி வகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், மூடப்பட்டுள்ள அரசின் 3 மில்களை இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு செயல்படுத்தப்படும் எனவும், அரசு கலந்தாய்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிற்கும் அரசு நிதி வழங்கும் எனவும் ரங்கசாமி கூறியுள்ளார். கடற்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாரம்பரியமிக்க நகராட்சி கட்டிடம் விரைவில் திறக்கப்படும் முதலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments