வாழையைப்போல் முருங்கை மரத்திலும் பூ தொடங்கி இலை, காய் என அனைத்தும் சமைக்க மட்டுமின்றி ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. அந்த வகையில், அடிகடி கேட்கும் ஒரு அறிவுரை முருங்கையின் நுனி கிள்ளிவிட வேண்டும் என்பதாகும். இதைப் பற்றி, இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கை நாற்றுகள் 2 மாதத்தில் 3 அடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். அப்போது தரையிலிருந்து இரண்டரை அடி உயரம்விட்டு, அதற்குமேல் உள்ள நுனிகளைக் கிள்ளி விட வேண்டும். இதனால், அதிகச் சிம்புகள் உருவாகும். முருங்கைச் சாகுபடியில் நுனி கிள்ளுதல் முக்கியமான ஒன்றாகும். பலர் இதைச் செய்வதில்லை. சில விவசாயிகள் 90 நாட்களுக்குப் பிறகு நுனி கிள்ளுகிறார்கள். இதுவும் தவறான செயலாகும்.
60-ஆம் நாளிலிருந்து 70-ஆம் நாளுக்குள் நுனி கிள்ளி விட வேண்டும். நுனி கிள்ளுவதால் இலைகள் அதிகம் உருவாகி, பூக்களும் அதிகம் பூத்து காய்கள் உருவாகும். இதேபோல, விதைத்து அல்லது நடவு செய்து ஒர் ஆண்டு முடிந்ததும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரம் விட்டுவிட்டு, மேல் உள்ள பாகத்தை வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்தால், அதிகச் சிம்புகள் அடித்து இரண்டாம் ஆண்டும் நல்ல மகசூல் பெறலாம். அடுத்து தென்னை நடப்போகும் மக்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் குறித்தும், இந்தப் பதிவில் பார்க்கலாம்.
TNPSC: குரூப்- 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கவும்
தென்னை மரம் நடப்போறீங்களா? இதை செய்ய தவறாதீர்கள்!
தென்னை நடவுக்கு மார்கழி மாதம் ஏற்ற மாதமாகும், செம்மண் மற்றும் செம்மண் மணல் கலந்த மண் வகைகளில் தென்னை சிறப்பாக விளையும். களிமண்ணில் வளர்ச்சி குண்றும் என்பது குறிப்பிடதக்கது. தேர்வு செய்த நிலத்தில் 25 அடி இடைவெளியில் 2 அடிக்கு 2 அடி அளவில் குழி வெட்ட வேண்டும்.
காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?
குழிகளில் கால் பாகம் பொலபொலப்பான மண்ணை நிரப்பி பிறகு, ஒவ்வொரு குழியிலும் தலா 10 கிலோ மாட்டு எரு, 200 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றை இட்டு மண்ணை நிரப்பி கன்றை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும். இவ் விதியை பின்பற்றி நடவு செய்தால், நிச்சயம் நல்ல பலன் பெறலாம்.
மேலும் படிக்க:
தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!
கோழிக்கான தடுப்பூசி மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டியவை
Share your comments