வெந்தயக் கீரை வெந்தயப் பருப்பு விதைகள் மூலம் பயிரிடப்படுகிறது.இந்த வெந்தயக் கீரை சாகுபடியைப் பொறுத்த வரை குறுகிய காலத்தில் நன்றாக முளைத்து,பூத்து,காய் காய்ந்து பலன் தரக்கூடியது.வெந்தய சாகுபடி செய்யும் போது பூ பூக்குவதற்கு முன்பே இதன் அறுவடை செய்து முடிக்க வேண்டும்.சிறிய இலைகளோடும்,மெல்லியத் தண்டுகளோடும் இருக்கும் இந்த வெந்தயக் கீரை மிதமான கசப்பு தன்மையை கொண்டிருக்கும் என்றாலும் பெருமளவில் இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
பருவகாலம்:
வெந்தயக் கீரை விதைக்க சரியானக் காலம் என்று பார்த்தால் சித்திரை,ஆடி,மார்கழி,மாசி ஆகிய மாதங்கள் பொருத்தமாக இருக்கும் மற்றும் விளைச்சலும் நன்றாக அமையும்.
விதையளவு:
வெந்தயக் கீரை சாகுபடி செய்வதற்கு விதையளவைப் பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.5 கிலோ விதைப் போதுமானதாக இருக்கும்.
நிலம் தயாரித்தல்:
வெந்தயக் கீரை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும்,5 டன் உரத்துடன் 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் உருவாக்கப்பட வேண்டும்.
விதைக்கும் முறைகள்:
வெந்தயக் கீரை விதைகளை விதைக்க விதையில் மணலை சேர்த்து தயார் செய்யப்பட்ட நிலத்தில் தூவ வேண்டும்,பின்னர் மெதுவாக கையால் கிளறி விட வேண்டும்,அதன் பின்னர் நீர்ப்பாசனம் முறையாக செய்ய வேண்டும்.
உரங்கள்:
வெந்தயம் சாகுபடி முறையில் நடவு செய்து முடித்தப் பிறகு 7 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை ஜீவாமிர்தம் கரைசலைத் தண்ணீரில் கலந்து,நீர் பாய்ச்ச வேண்டும்.இது போன்று செய்வதினால் பயிர் வளர்ச்சி சீராக மேம்படும்.
களை எடுத்தல்:
விதைகள் விதைத்த 6ஆம் நாளில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன,சரியாக 10ஆம் நாளில் களையெடுப்பது மிகவும் அவைசியமாகும்.
பயிர் பாதுகாப்பது:
வெந்தயக் கீரை விதைக்கும் போது வளர்ந்த தாவரத்தைப் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று.இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் மூன்றையும் சமமாக சேர்ந்து இடித்து ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து 10லிட்டர் தண்ணீரில் 300மில்லி என்ற வீதத்தில் கலந்து,10 நாட்களுக்கு ஒருமுறை வளரும் தாவரங்களில் தெளித்தால் பூச்சித் தாக்குதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அறுவடை:
வெந்தயக் கீரை விதைத்து 21ஆம் நாள் அறுவடைக்கு கீரை தயாராக இருக்கும்,21 நாட்களுக்குப் பிறகு கீரையை வேருடன் பிடிங்கி விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:
விதைத்த முப்பது நாட்களில் விற்பனைக்கு தயாராகும் வெந்தயக்கீரை
சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் எதிரியா?
சர்க்கரை நோயை நினைத்து கவலையா? இதோ உங்களுக்கான சிறப்பான தீர்வு பன்னீர் பூ!
Share your comments