MOP உரத்தின் விலையினை 4,500 ரூபாவினால் குறைப்பது தொடர்பான அறிவிப்பு சார்ந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
50 கிலோ MOP உரம் ஒரு மூட்டை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தத் தொகையை விவசாயிகள் ஏற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் உர நிறுவனங்களின் எண்ணிக்கையின் அளவு 12 ஆக அதிகரித்து இருப்பதால், இந்த போட்டியின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டிக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை!
தொல்லியல் தளங்கள், நினைவுச் சின்னங்களுக்கு பொதுமக்கள் ஒரு நாள் பயணம்!
Share your comments