கொரோனா காலகட்டத்தில் வோளாண்மை பணிகளைத் தொடர முடியாமல் முடங்கிக்கிடக்கும் விவசாயிகள், தங்கள் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்க ஏதுவாக வேளாண் தங்கக் கடனை அளிக்கிறது எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி.
நாடே தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாகி, தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் முடங்க நேர்ந்தது.
அதேநேரத்தில் இயற்கையின் கரிசனத்தால், தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில், தீவிரம் அடைந்துள்ளது. எனவே இதனைப் பயன்படுத்திக்கொண்டு, வேளாண் பணிகளைத் தொடங்குவதில், பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் விவசாயியா நீங்கள்?
அப்படியானால், உங்களைப் போன்றோருக்கு கைகொடுக்கிறது எஸ்பிஐ வங்கியின் அக்ரி கோல்டு லோன் (Agri Gold Loans) திட்டம்.
நிதி ஒதுக்கீடு (Fund Sanction)
ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை எஸ்பிஐ வங்கி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் 10 ஆயிரம் கிளைகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வேளாண் தங்கக் கடன் (SBI Agri Gold Loan )
இத்திட்டத்தில், வேளாண் பணிகள் அனைத்திற்கும் கடன் கிடைக்கும். குறைந்த வட்டியில் உடனே கடனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விவசாயிகள் தங்களுக்கு சொந்தமாக உள்ள நிலத்தின் ஆவண நகலை ஒப்படைக்க வேண்டியது கட்டாயம்.
நகைகளை அடமானம் வைத்துத், தங்களுக்குத் தேவைப்படும் தொகையை, விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் வகைகள் (Types)
பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன் (Agri Gold Loan for Crop Production)
பல்முனைப் பயன்பாட்டு தங்கக் கடன் (Multi Purpose Gold Loan)
என இரண்டுவகைக் கடன்களை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது.
பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன்
இத்திட்டத்தின் படி 3 லட்சம் ரூபாய் வரை பெறும் கடனுக்கு, ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு ஆண்டுக்கு 9 .95 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
பல்முனைப் பயன்பாட்டுத் தங்கக் கடன்
இந்தத் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 9.95 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
திட்டத்தின் பயன்கள் (Benefits of SBI Gold Loan)
-
தங்க ஆபரணங்களை அடமானம் வைப்பதால், விரைவில் கடன் வழங்கப்படும்.
-
கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
-
மிகக் குறைந்த வட்டி விகிதம்
-
மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
-
தொகையைத் திரும்பச் செலுத்துவதிலும், விவசாயிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு சலுகைகள்
தேவைப்படும் ஆவணங்கள் (Documents Required )
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு
-
வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், இவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாக அளிக்கவேண்டும்.
-
முகவரிச்சான்று
-
விவசாய நிலத்திற்கான சான்று
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டங்களின் கீழ் கடன் பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை அணுகவும்.
அங்குள்ள வங்கி அதிகாரிகளிடம் இருந்து, எஸ்பிஐ தங்கக்கடனுக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்வதுடன், அதனைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் YONO app மூலமும் விவசாயிகள் எஸ்பிஐ தங்கக் கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எஸ்பிஐ வங்கியின் அலுவலக இணையதளமான https://sbi.co.in மூலமும் விவசாயிகள் தங்கக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க...
Share your comments