விவசாயிகளின் பொருளாதாரத் தேவையைச் சமாளிக்க ஏதுவாக பல்வேறு கடன் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக பெரும்பாடுபட்டு, சாகுபடி செய்த விளைபொருட்களை பத்திரமாகப் பாதுகாத்து, வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்கும் வரை, விவசாயிகளின் பணி முடிவடைவதே இல்லை.
அந்த வகையில், சாகுபடியின் இரண்டாம் கட்ட பணியான, விளைபொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு அல்லது பதப்படுத்தும் நிலையம் அமைக்க இந்தியாவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி கடன் வழங்குகிறது.
குடோன் லோன்
வேளாண் குடோன் லோன் (Agriculture Godown) அல்லது கோல்டு ஸ்டோரேஜ் லோன் (Cold Storage) வழங்கி வேளாண்மைத் தொழிலை லாபகரமாக மாற்ற உதவுகிறது இந்தியன் வங்கி.
தகுதி
இந்த திட்டத்தின் கீழ் தனிநபராகவோ, சில விவசாயிகள் கூட்டாக சேர்ந்தோ, விவசாயச் சங்கங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும் இந்த கடனைப் பெற முடியும்.
கடன் வகைகள்
இத்திட்டத்தில் இரண்டு வகைகளில் கடன் வழங்கப்படுகிறது.
டேர்ம் லோன் (Term Loan)
இதில் வாங்கப்படும் கடனுக்கு மாதாந்திர தொகையாக கடன் தொகையைத் திருப்பி செலுத்தலாம்.
கேஷ் கிரடிட் (Cash Credit)
இதில், உங்களுக்கு தேவையான தொகையை கையிருப்பாகக் கொண்ட கடன் கையிருப்பு (Cash Credit Account) கணக்கு, விவசாயியின் பெயரில் தொடங்கிக் கொடுக்கப்படும். இந்த கணக்கில் இருந்து தனக்கு தேவையான தொகையை விவசாயி அவ்வப்போது எடுத்துக்கொண்டு, தமக்கு வருமானம் வரும்போது திரும்பி செலுத்திக்கொள்ளலாம்.
வட்டி விகிதம்
இந்த இரண்டுவகைக் கடன் திட்டத்திற்கும் ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன்தொகை எவ்வளவு?
டேர்ம் லோன்
வேளாண் திட்டத்திற்கு தேவையான தொகையில், 75 சதவீதம் கடனாக வழங்கப்படும்.
கேஷ் கிரடிட்
வேளாண் திட்டத்திற்கு தேவைப்படும் தொகையில், 70 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். எஞ்சியத் தொகையை விவசாயி செலுத்த வேண்டி வரும்.
திருப்பிச் செலுத்தும் காலம்
இவ்விரு திட்டங்களிலும், கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய கால உச்சவரம்பு 9 ஆண்டுகள்.
இதில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பின்னர் வரும் 7 ஆண்டுகளில், முழு கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்த வேண்டும்.
பிணையப் பத்திரம்
வாங்கும் கடனுக்கு ஏற்றவகையில், நிலப்பத்திரம், வீட்டு பத்திரம் உள்ளிட்டவறை அடமானம் வைக்க வேண்டியது கட்டாயம்.
வாங்கும் கடன் தொகைக்கு தக்க மதிப்புள்ள வீடு இல்லாத பட்சத்தில், எல்ஐசி பாலிசி , வங்கியின் நிரந்திர வைப்புத் தொகைக்கான பத்திரம், அரசின் தங்க சேமிப்புப் பத்திரம் ஆகியவற்றை அளிக்கலாம். மேலும் கடன் பெறுவோரின் சொந்த ஜாமீனும் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க...
எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்!
Share your comments