தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கோழிப் பண்ணை மற்றும் மாட்டுத்தீவனங்களுக்காகவும், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு என ஆண்டுக்கு 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.
இதில் பயிர் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மக்காச்சோள பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் அதனைக் கட்டுப்படுத்து வழிமுறைகள் குறித்து நாம் பார்ப்போம்.
குருத்து ஈ
தாக்குதலின் அறிகுறிகள்
முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டிற்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை தாக்குகிறது. இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்
பூச்சியின் விபரம்
சிறியதாக சாம்பல் நிறத்தில் ஈ காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
-
பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்
-
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS என்ற வீதம் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும்
-
அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றியபின் உழுதுவிடவேண்டும்
-
குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை தெளிக்கவேண்டும்
⦁ மெத்தில் டெமட்டான் 25 EC 500 மி.லி/ஹெக்டேர்
⦁ கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்
⦁ டைமீதோயேட் 30 EC 500 மி.லி/ஹெக்டேர்
⦁ மெத்தில் டெமட்டான் 25 EC 1000 மி.லி/ஹெக்டேர்
தண்டுத்துளைப்பான்
தாக்குதலின் அறிகுறிகள்
புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்
இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்
வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
அமெரிக்க படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை!!
பூச்சியின் விபரம்
புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலை பழுப்பு நிறத்துடன் காணப்படும்
தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை
பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி குருணைகளை மணலுடன் (50 கிலோ) கலந்து விதைத்ததிலிருந்து 20 நாட்கள் கழித்து இலைகளில் படும்படியாக தூவ வேண்டும்
போரேட் 10 G 8 கிலோ
கார்பரில் 4% G 20 கிலோ
தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணி ட்ரைகோகர்மா கைலோனிஸ் 2,50,000 என்ற எண்ணிக்கையில் மூன்று முறை ஒரு வார இடைவெளியில் வயலில் விடவும் மற்றும் மூன்றாவது முறையில் புழு ஒட்டுண்ணி கோட்டிசா பேலிவிபஸ் 5,000 என்ற எண்ணிக்கையில் விடவும்.
இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான்
தாக்குதலின் அறிகுறிகள்:
இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது. தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்.
பூச்சியின் விபரம்
சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும்இ தலை கருமை நிறமாகவும் இருக்கும். அந்துப் பூச்சி: வைக்கோல் நிறத்துடன், வெள்ளை நிற இறகுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
-
ஹெக்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
அசுவினி
கரும் பச்சை நிற கால்களுடன் மஞ்சள் நிறமாக தோன்றும்
தாக்குதலின் அறிகுறிகள்:
இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும் கூட்டமாக காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி பூச்சி மருந்தினை தெளிக்கலாம்
டாக்டர் கே.சி சிவபாலன்
வேளாண் ஆலோசகர் – திருச்சி
மரங்களை தாக்கும் நோய்களும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!
முருங்கையை தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!
தொடர் மழையினால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு: அழுகுவதைத் தவிர்க்க தேனி விவசாயிகள் கையாளும் புதிய முறை
Share your comments