PM Kisan 13வது தவணை இந்த தேதியில் வருகிறது, வேளாண் மாணவர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, TNEB: 100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை என்ற தகவல் போலியானது, சிறப்புற நடைபெற்ற கிராமப்புற மேம்பாடு மற்றும் தினை தேசிய மாநாடு 2023, விவசாயத்தில் சந்தேகத்தினைப் போக்க FPO தொடக்கம், நெல்லிற்கான கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்பட உள்ளன முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்
1. PM Kisan 13வது தவணை இந்த தேதியில் வருகிறது!
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் நிதியுதவியின் 13-வது தவணை இன்னும் இரு நாட்களில் விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 13-வது தவணை வருகிற ஜனவரி 23ம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட இருக்கிறது.
2. வேளாண் மாணவர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி!
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உழவர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கும் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பயிற்சி மையத்தின் தலைவர் எஸ்.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் விஜயசாரதி முன்னிலை வகித்தார்.
மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு
3. TNEB: 100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை என்ற தகவல் போலியானது!
500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் மின்சாரம் கிடையாது என்ற குறுஞ்செய்தி அனைவரது தொலைபேசிக்கும் பரவி வருகின்ற நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இதற்கு விளக்கமளித்துள்ளது. அந்த போலி செய்தியினைப் பகிர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியம், இது முற்றிலும் போலி என்றும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என்றும் விளக்கமளித்துள்ளது.
4. சிறப்புற நடைபெற்ற கிராமப்புற மேம்பாடு மற்றும் தினை தேசிய மாநாடு 2023!
மில்லட் மார்ட் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த கிராமப்புற மேம்பாடு மற்றும் தினை தேசிய மாநாடு 2023, தினை தானியங்கள் மற்றும் தினை மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு உறுதியளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அக்ரிடெக் ஸ்டார்ட்அப் ஆகும். இது தில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குத் தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதில் சிறப்பு பேச்சாளராகக் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி. டாம்னிக் கலந்துகொண்டார்.
5. விவசாயத்தில் சந்தேகத்தினைப் போக்க FPO தொடக்கம்!
FPO என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பாக இருக்கும். இது விவசாயத்தை அமைப்பு சாரா துறையிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றும். ஆனால் FPO அமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களால் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான ஊடகங்கள் இதுவரை பெரிதாக இல்லை என்ற நிலையில், தற்பொழுது கிரிஷி ஜாக்ரனால் ஜனவரி 24 முதல் அதிகாரப்பூர்வமாகக் கிரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் விவவசாயத்திற்கான FPO தொடங்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு
6. நெல்லிற்கான கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்பட உள்ளன!
நாமக்கல் மாவட்டம் எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஆயிரம் மெட்ரிக் டன் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று எருமைப்பட்டியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் என மாவட்டத்தில் இரண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7. அக்ரி டெக்னோவா 2023 பிப்ரவரியில் தொடக்கம்!
வேளாண் மற்றும் உணவு சார் தொழில் முனைவு கருத்தரங்கம் வரும் பிப்ரவரி 16-ஆம் நாள் நடைபெற உள்ளது. லாபம் தரும் மூலிகை பயிர் சாகுபடி, நிரந்தர வருமானம் கொழிக்கும் வெண்பட்டு வளர்ப்பு, மலர் சாகுபடியில் தொழில் வாய்ப்புகள் முதலான விவசாயம் சார்ந்த தகவல்களை இக்கருந்தரங்கு வழங்கும் எனக் கூறப்படுகிறது. இது மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!
8. TNEB -இன் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வரும்!
மத்திய அரசு புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
9. Ration: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவது அமல்!
மத்திய அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
10. மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. சென்னையில் ஒரு லிட்டர் 102.65 ரூபாய் எனும் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.102.63 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11. தங்கத்தின் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தைத் தாண்டியது!
தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலை சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ள பலரினை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்பொழுது ரூ.42,368 யைத் தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்திருப்பவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12. மீன் விலை உயர்வு! குவியும் பொது மக்கள்!!
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்களால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மீன் பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வஞ்சிரம் ரூ.800 முதல் ரூ.1000 -க்கும் துள்ளு கெண்டை ரூ. 250 ரூபாய் வரையிலும் நெத்திலி மீன் ரூ.200 வரையிலும் இரால் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
13. விவசாயக் கூலி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை!
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாய கூலி தொழிலாளர்களின்குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் பெற்று பயனடையுங்கள். நன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் 2.5 ஏக்கரும், புன்செய் நிலம் 5 ஏக்கரும் வைத்துள்ளவர்கள் இந்த உதவி தொகைக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
14. இன்றைய காய்கறி விலை நிலவரம்
தக்காளி-ரூ.40
உருளைக்கிழங்கு -ரூ.35
பெரிய வெங்காயம் -ரூ.30
சிறிய வெங்காயம் -ரூ.80
வெண்டைக்காய் -ரூ.80
பச்சை மிளகாய் -ரூ.30
தேங்காய் -ரூ.25
கேரட் -ரூ.45
காலிபிளவர் -ரூ.25
கத்திரிக்காய் -ரூ.35
பீட்ரூட் -ரூ.20
15. இன்றைய வானிலை தகவல்கள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 24-ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டிய புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!
தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!
Share your comments