PM Kisan என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா குறித்த தற்போதைய நிலையினைச் சரிபார்க்க இந்த டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைக்கலாம்.
நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக ரூ.6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என, விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே இந்தப் பணம் நேரடியாக அனுப்பப்படுகிறது.
PM Kisan திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 12-வது தவணை என்று கிடைக்கும் எனப் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்திய அப்டேட்டின்படி, வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வரும் என்று அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
இந்த நிலையில் பணம் என்று வரும்? என பயனாளிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அவர்களின் விண்ணப்ப நிலை எந்த நிலையில் உள்ளது? எனச் சரிபார்த்துக் கொண்டு உள்ளனர். PM Kisan வெப்சைட்டிலேயே விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம். ஆனால் ஆன்லைன் மூலமாகs சரிபார்ப்பதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம். இதற்கெனவே மத்திய அரசு ஒரு தகுந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
அதாவது, பிஎம் கிசான் ஸ்டேட்டஸ் மற்றும் இதர அப்டேட்களுக்கு டோல் ஃபிரீ நம்பரை வெளியிட்டுள்ளது. பயனாளிகள் 155261 என்ற நம்பருக்கு அழைத்தாலே போதும். அனைத்து அப்டேட்களையும் பெறமுடியும். இதற்கு முதலில் KYC சரிபார்ப்பை முடித்திருத்தல் வேண்டும். KYC சரிபார்ப்பு என்பது ஆதார் மற்றும் மொபைல் நம்பர் OTP சார்ந்த ஒரு சரிபார்ப்பு முறையாகும். இதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது தெரிந்த ஒன்று ஆகும்.
12ஆவது தவணை எப்போது வரும் என எண்ணிக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த 155261 என்ற டோல் ஃபிரீ நம்பர் வசதி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
தமிழக மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க புதிய திட்டம் அறிவிப்பு!
Share your comments