நீங்கள் PM கிசானின் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்களுக்காக 2 முக்கியமான புதுப்பிப்புகள்(update) உள்ளன. ஜூன் 30 தேதி மிகவும் முக்கியமானது. இரண்டு பணிகளுக்கு இது கடைசி தேதி ஆகும். முதலாவதாக, இந்தத் திட்டத்தில் இன்னும் உறுப்பினராகாதவர்கள், ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு. தாமதமின்றி, அவர்கள் PMKisan.gov.in வலைத்தளத்துக்கு சென்று உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். இரண்டாவது, இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் கடன்கள் போன்ற சலுகைகளைப் பெறுவர்களும், இந்த தேதிக்கு முன்னர் அவர்கள் கடன் தொகையையும் செலுத்த வேண்டும். ஏனெனில் அதன் பிறகு அவர்களுக்கு வட்டி தள்ளுபடி கிடைக்காது. முழு வட்டி செலுத்த வேண்டும்.
கடைசி தேதிக்கு முன்னர் நீங்கள் உறுப்பினராகிவிட்டால், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2000-2000 என இரண்டு தவணைகளைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 8 தவணைகளை அரசு வெளியிட்டுள்ளது. 9 வது தவணை ஆகஸ்டில் அட்டவணைப்படி வெளியிடப்படுகிறது. கோவிட் நெருக்கடியிலும்(Covid Mahamari), இந்த திட்டத்தின் மூலம் கோடி மக்களுக்கு ரூ.2,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் கிடைத்த 8 வது தவணை
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (பிரதமர்-கிசான்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 8 வது தவணை நிதி சலுகைகளை பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் வழங்கினார். அவர் 19 ஆயிரம் கோடிக்கு மேல் நாட்டின் 9.5 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாய குடும்பங்களுக்கு வழங்கினார்.
திட்டத்தில் இணைவது எப்படி
நீங்கள் பி.எம். கிசானில் உறுப்பினராக விரும்பினால், மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரி அல்லது பட்வாரி மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, பொது சேவை மையங்கள் மூலமாகவும் இந்த திட்டத்திற்கு பதிவு செய்யலாம். இது தவிர, இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை பிரதமர் கிசான் போர்ட்டல் மூலமாகவும் செய்யலாம்.
நீங்களே சுயமாக விண்ணப்பிக்கலாம்
1.பிரதமர் கிசானின் வலைத்தளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/.
2.'Farmers Corner' என்ற பெயரில் ஒரு விருப்பம் தோன்றும்.
3.இதில், 'New Farmer Registration' விருப்பம் கீழே தோன்றும்.
4.New Farmer Registration' விருப்பத்தை கிளிக் செய்யவும் .
5.ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் நீங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை(Captcha) நிரப்ப வேண்டும்.
6.ஆதார் எண்ணுடன் சில தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
7.பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.
8. இப்போது தகல்வல்களை நிரப்பியவுடன் சமர்ப்பிக்கவும்.
ஆத்மனிர்பர் பாரத் யோஜனா
ஆத்மனிர்பர் பாரத் யோஜனாவின் கீழ் பிரதமர் கிசான் உறுப்பினர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டையும் (கே.சி.சி) அரசாங்கம் வழங்கி வருகிறது. இந்த அட்டையில் எளிதான மற்றும் மலிவான கடன் கிடைக்கிறது. ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவது உரிய தேதிக்குள் செய்யப்பட வேண்டியது அவசியம். அதன் பிறகு, நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
கே.சி.சி யிலிருந்து ரூ.3 லட்சம் வரை கடன்
விவசாயிகளுக்கு கே.சி.சி.யில் (KCC ) இருந்து ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டி 9 சதவீதம், ஆனால் அரசாங்கம் கே.சி.சி.க்கு 2% மானியம் அளிக்கிறது. இதன் மூலம், விவசாயி கே.சி.சி.யில் 7 சதவீத வட்டிக்கு கடன் பெறுகிறார். விவசாயிகள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தினால், அவர்கள் வட்டிக்கு 3 சதவீதம் வரை தள்ளுபடி பெறுகிறார்கள், அதாவது மொத்த வட்டி 4 சதவீதமாகவே உள்ளது.
விவசாயிகளுக்கு சென்றடைந்த முதல் தவணை
வங்காளத்தை செற்ந்த லச்சக்கனக்கான விவசாயிகளுக்கு முதல் மாத தவணம் மே மாதம் பேற்றனர். இதன் மூலம் மேற்கு வங்காள மாநிலத்தின் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க
PM-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!
PM Kisan : விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் 8-வது தவணை- உங்கள் கணக்கை Check செய்ய எளிய டிப்ஸ்!
Share your comments