1. விவசாய தகவல்கள்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை 50% மானியத்தில் பெற இன்றே விண்ணப்பிக்கவும்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Pudukottai: Apply today for subsidized agricultural machinery and tools in tamilnadu scheme

புதுக்கோட்டை: விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் நடப்பு நிதியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தனிப்பட்ட விவசாயிகள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் முதல் ஒதுக்கீடாக 29 எண்களுக்கு ரூ.38.24 லட்சம் மானியம் பொது பிரிவினருக்கும் மற்றும் 5 எண்களுக்கு ரூ.10.65 லட்சம் மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது கருவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்றிட, புதுக்கோட்டை, திருவரங்குளம், விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி, வட்டார விவசாயிகள் திருச்சி மெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, உதவி செயற்பொறியாளர், அலுவலகத்திலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், ராஜேந்திரபுரம், நைனா முகமது கல்லூரி அருகில் அறந்தாங்கி அலுவலகத்திலும் தங்களது விண்ணப்பத்தினை நேரடியாக சமர்பித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு, வேளாண்மைப் பொறியியல் துறையிலிருந்து மானிய உதவி பெறுவது எப்படி?

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் தங்கள் கைபேசியிலுள்ள கூகுள் பிளேஸ்டோரிலிருந்து "Uzhavan App" உழவன் செயலி-யை பதிவிறக்கம் செய்து இடுபொருள் முன்பதிவு என்பதனை தேர்வு செய்து, வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் என்பதனை தேர்வு செய்த பின் ஆதார் எண்ணை பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்திட்ட பின்னர் அவருக்கு ஒருமுறை உபயோகிக்கக் கூடிய கடவு எண் OTP அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். இதன் பின்னர், உழவன் செயலியில் அவரைப் பற்றிய முழுமையான தகவலை உள்ளீட்டு, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க:

பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்பட்டு அவருக்கு கடவுச்சொல் ஒன்று வழங்கப்படும்.

அந்தச் கடவுச் சொல்லை பயன்படுத்தி, விவசாயி, மத்திய அரசின் இணையதளத்தில் தங்களது நிலம் சம்பந்தமான விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், தங்களது குடும்பத்தாரைப் பற்றிய விபரங்களஅ ஆகியவற்றினை அளிக்க வேண்டும்.

மேலும் தனது புகைப்படம், அடையாள அட்டையாக இருப்பிடச் சான்று, கடவுச்சீட்டு (Passport). குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிரந்தர கணக்கு எண் (PAN No.) இவற்றில் ஏதேனும் ஒன்று, வங்கியின் பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலை, தேவைப்படின் அவரின் சாதி மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் ஆகிய அனைத்தையும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

பின்னர் தனக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை இணையதளத்தின் மூலம் தேர்வு செய்திட வேண்டும். அப்போது அவருக்கு 6 இலக்க இரகசிய குறியீட்டு (எண் PIN No.) அளிக்கப்படும்.

மேற்படி இணையதளத்தில் விவசாயி தனக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் முகவரை தேர்வு செய்திட வேண்டும். இவ்வாறாக 15 நாட்களுக்குள் உரிய முகவரை தேர்வு செய்யாத பட்சத்தில் அவரின் விண்ணப்பம் தானாகவே ரத்தாகி விடும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!

விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா பயன்படுத்த ஆலோசனை

English Summary: Pudukottai: Apply today for subsidized agricultural machinery and tools in tamilnadu scheme through uzhavan app or website her are the details Published on: 03 November 2022, 01:58 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.