1. விவசாய தகவல்கள்

Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

Poonguzhali R
Poonguzhali R
Ration Card: Special facility in ration shops|New electricity bill|Rise in Aavin milk price|Drop in egg price

ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி! இன்று முதல் நடைமுறை, TNEB: புதிய மின் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும், தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு, ரேஷன் கார்டில் மாற்றம் - நாளை சிறப்பு முகாம், 50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம், முட்டை விலை சரிவு! அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி, அதிக அளவு கரும்புகள்! வருத்தத்தில் விவசாயிகள் ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை

 

1. ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி! இன்று முதல் நடைமுறை!!

மத்திய அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது ரேஷன் பொருட்களை நாட்டிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் தனது டிஜிட்டல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி எடுக்க முடியும். இந்த வசதி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வந்த பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

2. TNEB: புதிய மின் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும்!

மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவு! ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்!

3. தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு!

தமிழகத்தில் தனியார் பாலின் விலை லிட்டருக்கு ரூ 2 வரை உயர்ந்துள்ளது. அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்

4. ரேஷன் கார்டில் மாற்றம் - நாளை சிறப்பு முகாம்!

திருச்சி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

5. 50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம்!

வீட்டில் இருந்துகொண்டே நமக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்க முடிகிறது. இ-காமெர்ஸ் துறையில் தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் கூட போதுமானது. ஆனால் செய்த முதலீட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்ற சூழலில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் தொடங்கி முதலீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், மீஸோ போன்ற வெப்சைட்கள் மூலமாக விற்பனை செய்யலாம் இ-காமெர்ஸ் நிபுணரான நிவேதா முரளிதரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்

6. முட்டை விலை சரிவு! அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி!!

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் மூலம் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி ஆகும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி தற்போது முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 12 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை சரிந்துள்ளது. ஒரே நாளில் 20 காசுகள் சரிந்து 5 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

7. அதிக அளவு கரும்புகள்! வருத்தத்தில் விவசாயிகள்!

பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பல விவசாயிகள் கரும்பு பயரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கத்தை விட கரும்புகள் பயிரிடப்பட்டது. இதில் விவசாயிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட கரும்புகளை அரசு கொள்முதல் செய்ததால் மீதமுள்ள கரும்புகளை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்றனர். தஞ்சையை பொருத்த வரையில் பல வியாபாரிகள் கரும்புகளை வாங்காததால் பல கரும்புகள் இன்னும் அறுவை செய்யாமல் இருக்கும் நிலையில் கரும்புகளை வாங்கிய வியாபாரிகள் வாங்கிய கரும்புகளை விற்பனை செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான கரும்புகள் வீணாகியுள்ளது.

மேலும் படிக்க

தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!

TN மீன்பிடி கப்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மோதல்!

English Summary: Ration Card: Special facility in ration shops|New electricity bill|Rise in Aavin milk price|Drop in egg price Published on: 21 January 2023, 04:14 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.