5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவி வழங்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் "மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்" திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோட்டார் பம்ப்செட்களை வாங்குவதற்கு அல்லது பழைய திறனற்ற மின்சார மோட்டார் பம்ப்செட்களை மாற்றுவதற்கு - ஆணைகள் வெளியிடப்பட்டது.
இதனை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
2.பெண் தொழில்முனைவோரை உருவாக்க 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கல்
கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக கிராமப்புற ஏழை விதவைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள்/செம்மறி ஆடுகளை வழங்கி பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதி அளக்கப்பட்டுள்ளது.
3.திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறுபடுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 28.12.2022 முதல் 27.04.2023 வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக மொத்தம் 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீரழிப்பு உட்பட தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.
4.திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.122.22 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இரண்டாம் தலத்தில் உள்ள கூட் ட அரங்கில் வைத்து முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் அணைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள் .எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது.
5.தமிழகம்: மல்பெரி உற்பத்தி அமோகமாக உள்ளதாக MSME அமைச்சர் அன்பரசன் பேச்சு
பட்டு உற்பத்தியை மேம்படுத்த அரசு எடுத்து வரும் தொடர் முயற்சியால், மாநிலத்தில் மல்பெரி உற்பத்தி 44,460 ஏக்கரில் இருந்து 55,840 ஏக்கராக உயர்ந்துள்ளது என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் புதன்கிழமை தெரிவித்தார். நகரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டு வளர்ப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் அன்பரசன் வழங்கினார். அப்போது அவர், பட்டுப்புழு மற்றும் கொக்கூன் செடிகளுக்கான மானியம் ரூ.87,500ல் இருந்து ரூ.1.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டுப்புழு மற்றும் கொக்கூன் வளர்ப்பிற்கு தேவையான மூலப்பொருட்கள் மாநில அரசின் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. "பட்டு வளர்ப்புத் துறையில் கணினிமயமாக்கும் பணியும் நடந்து வருகிறது," என்று கூறினார்.
6.வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பாக அதிகாரிகள் நாசிக் விஜயம்
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் இருந்து செயலாளர் மனோஜ் அஹுஜா, கூடுதல் செயலாளர் டாக்டர்.அபிலக்ஷ் லிகி மற்றும் தோட்டக்கலை ஆணையர் பிரபாத் குமார், டிசம்பர் 27 அன்று மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரி மற்றும் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை (NHRDF) சிட்டகான், சயாத்ரி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் கிராமத்திற்கு விஜயம் செய்து விவசாயிகளுடன் உரையாடினர். இந்திய அரசால் தொடங்கப்பட்ட கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தின் முன்னோடியாக திராட்சைக்கான 12 கிளஸ்டரில் ஒன்றாக நாசிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மகாராஷ்டிரா, இந்தியாவின் முன்னணி FPO மற்றும் நம்பர் 1 திராட்சை ஏற்றுமதியாளரான சஹ்யாத்ரி ஃபார்மர்ஸ் ப்ரொட்யூசர் கம்பெனி லிமிடெட்டின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், கிளஸ்டர்-குறிப்பிட்ட தலையீடுகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க விவசாயிகளுடன் தொடர்புகொள்வதற்கும், இவர்கள் அங்கு விஜயம் செய்தனர்.
7.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் 4 மணி நேரத்தில் 6.03 லட்சம் மரங்களை நட்டு உலக தாதனை
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 மணி நேரத்தில் 6.03 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. டிசம்பர் 23, 2022 அன்று, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் எவர் கிரீன் சிட்டி கிளப் இணைந்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டை கிராமத்தில் 4 மணி நேரத்தில் 6.03 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டது. இந்த சாதனையானது பின்னர் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் “4 மணிநேரத்தில் ஒரு குழுவால் நடப்பட்ட பெரும்பாலான மரங்கள்” என்ற பிரிவில் சான்றளிக்கப்பட்டது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.
8.கிரிஷ்ணகிரி அணையிலிருந்து 2ஆம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், 2022 - 2023 ஆம் ஆண்டிற்கு கிருஷ்ணகிரி அணை வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு 28.12.2022 முதல் 26.04.2023 வரை 120 நாட்களுக்கு கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.
9. இன்றைய காய்கறி விலை நிலவரம்
இன்றைய காய்கறி விலை நிலவரம் தக்காளி கி.18 உருளைக்கிழங்கு கி.35 பெரிய வெங்காயம் கி.28 சிறிய வெங்காயம் கி.90 பச்சை மிளகாய் கி.20 தேங்காய்(பெரியது) ஒன்று.25 வெண்டைக்காய் கி.50 கேரட்டு கி.30 கத்திரிக்காய் கி.35 காலிஃளார் கி .20
10.வானிலை தகவல்
இன்று முதல் டிசம்பர் 30 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்வ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
PMFBY| காய்கறி தோட்டம் முதல் செங்குத்து தோட்டம் வரை வீட்டில் அமைக்க, அரசு 50% மானியம்
ஜனவரி 2ம் தேதி பொங்கல் பரிசு விநியோகம்| தேங்காய்க்கு MSP உயர்வு| நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம்
Share your comments