பெரம்பலூர் மாவட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனக் குழி அமைக்க, ரூ.3,000 மானியம் பெறும் திட்டத்திற்கு விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
ரூ.30கோடி ஒதுக்கீடு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் மூலம் நிகழாண்டுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.30.48 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.
செய்ய வேண்டியவை
-
இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, குழி எடுத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,000 மானியம் வழங்கப்படுகிறது.
-
கரும்பு தவிர, இதர பயிர்கள் பயிரிடும் விவசாயிகள், சொட்டுநீர் பாசனம் அமைத்தால், குழாய் பதிப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது.
-
ஹேக்டேருக்கு, 3,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு, 2 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
-
பயன்பெற பதிவு செய்யும் போது, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
பணியானை வழங்கப்பட்ட பின்னர், ஒன்றே கால் அடி முதல் 2 அடி அகலம் வரையிலும், 2 அடி ஆழத்துக்கு குறையாதவாறும் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் குழி அமைக்க வேண்டும்.
-
பள்ளம் தோண்டும் பணியை ஆட்கள் மூலமாகவோ அல்லது கருவிகள் மூலமாகவோ விவசாயிகள் மேற்கொள்ளலாம்.
-
பிறகு, வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வயல் ஆய்வு மேற்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர், அதற்கான பட்டியல்களைச் சமா்ப்பித்து மானியம் பெறலாம்.
மேலும் படிக்க...
விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
Share your comments